இளசுகள் முதல் சிறுசுகள் வரை, வன்முறை மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்க்கவே அதிகம் விரும்புகின்றனர். ஆக்ஷன் ஜார்னரில் எடுக்கப்படும் படங்களும், ஹாரர் காட்சிகளுடன் எடுக்கப்படும் படங்களுக்கு சமீப காலமாக கிடைத்து வரும் வரவேற்பே இதற்க்கு சாட்சி. ஆனால் இது போன்ற படங்கள், உளவியல் ரீதியாக அவர்களுக்கு உடல்நலனில் கூட சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25
மனநலப் பிரச்சினைகள்
வன்முறை மற்றும் திகில் படங்கள் குறித்த சமீபத்திய ஆய்வில், இப்படிப்பட்ட படங்களைப் பார்ப்பது ஒரு நபரில் பல்வேறு உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவும். வன்முறை திரைப்படங்களைப் பார்ப்பது கவலை, மன அழுத்தம், மனநலப் பிரச்சினைகள், கோபம் மற்றும் பேச்சு முறையிலும் மாற்றங்களைக் ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பல்வேறு வன்முறை மற்றும் திகில் படங்கள் தொடர்பான வலைத் தொடர்களைப் பார்ப்பதால், பலருக்கு பயம் மற்றும் பதட்டம் ஏற்படுகிறது. இது அவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தவிர, மாதவிடாய் சுழற்சியில் கூட மாற்றங்களை ஏற்படுத்துகிறதாம். அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுத்தும் என கூறுகிறார்கள்.
45
ஆக்ரோஷம்
வன்முறை மற்றும் திகில் படங்களைப் பார்ப்பதால் சிலருக்கு ஆக்ரோஷம் அதிகரிக்கிறதாம். இந்த படங்களின் தாக்கத்தால், அவர்கள் மற்றவர்களிடமும் கோபத்தை வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
வன்முறை மற்றும் திகில் படங்கள் மனதில் மட்டும் அல்ல மூளையிலும் பல்வேறு எண்ணங்களை எதிர்மறை எழுப்புகிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் மனதில் ஆழமாக பதிந்த காட்சிகள் திரும்பத் திரும்ப கனவில் வருவதாக கூறப்படுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.