குக்கர் விசில் கிளீன் பண்ண கஷ்டமா இருக்கா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!!
Clean Pressure Cooker Whistle : குக்கரின் விசிலை சரியாக சுத்தம் செய்வதற்கான சில உதவி குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Clean Pressure Cooker Whistle : குக்கரின் விசிலை சரியாக சுத்தம் செய்வதற்கான சில உதவி குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இல்லத்தரசிகளின் சமையல் நேரத்தில் இலகுவாக்குவதற்காக பிரஷர் குக்கர் உதவுகிறது. பிரஷர் குக்கரில் சமைத்தால் உன்னை பேசி சீக்கிரமாகவே சமைத்து முடித்து விடலாம். அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சமநிலை 10 நிமிடத்தில் கூட செய்துவிடலாம். இதனால்தான் இல்லத்தரசிகள் அனைவரும் பிரஷர் குக்கரை தேர்வு செய்கிறார்கள். குக்கரில் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் இறைச்சி என எதை வேண்டுமானாலும் சமைத்துவிடலாம். இதனால் கேஸ் சிலிண்டரும் சேமிக்கப்படுகிறது. இருப்பினும் குக்கரை சுத்தம் செய்வதற்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால் அதையும் விட முக்கியமானது எதுவென்றால் குக்கர் விசில் தான். ஏனெனில் குக்கர் விசிலில் உணவுகளின் துகள்கள் தேங்கி இருந்தால் விசில் சரியாக வராது. இதனால் உணவு சமைப்பதற்கு கடினமாக இருக்கும். எனவே குக்கர் விசிலை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் ஒரு சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் டிஸ்வாஷ் லிக்விட் சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு அதில் குக்கர் விசில் போட்டு சுமார் 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு அதை வெளியே எடுத்து ஒரு பிரஷ் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இதற்கு நீங்கள் பழைய டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம். குக்கர் விசில் நன்றாக சுத்தம் செய்த பிறகு அதன் உள்ளே ஊதவும். இதன் மூலம் அதன் நூல் இருக்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
குக்கர் விசிலை சுத்தம் செய்வதற்கு வினிகரை பயன்படுத்தலாம். வினிகரானது குக்கர் விசிலை நன்றாக சுத்தம் செய்து விடும். இதற்கு சிறிதளவு தண்ணீரில் வினிகர் சேர்த்து அதில் குக்கரை போட்டு 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு பிரஷ் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் விசில் நன்றாக சுத்தமாகிவிடும் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: வேலை ஈஸினு குக்கரில் இந்த '5' உணவுகளை சமைக்குறீங்களா? இந்த தவறை பண்ணாதீங்க!!
குக்கர் விசிலை சுத்தம் செய்ய சிறிதளவு எலுமிச்சை சாறுடன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் குக்கர் விசிலை போட்டு 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் விசில் நன்றாக சுத்தமாகிவிடும்.
இதையும் படிங்க: குக்கரில் தண்ணீர் கசியுதா? இதைத் தடுக்க 5 சூப்பர் டிப்ஸ்
சில சமயம் எவ்வளவுதான் குக்கர் விசிலை சுத்தம் செய்தாலும் அதில் படிந்து இருக்கும் கருப்பு கறைகள் நீங்காது. எனவே அதை போக்க பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு சிறிதளவு தண்ணீரில் பேக்கிங் சோடா கலந்து அதற்கு குக்கர் விசிலை போட்டு 10 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு ஸ்கிரப் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் குக்கர் விசில் நன்றாக சுத்தமாகிவிடும். இந்த முறை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது.
நினைவில் கொள் : ஒவ்வொரு முறையும் குக்கரை பயன்படுத்தும் போது உடலில் குக்கர் விசிலை சுத்தம் செய்து விடுங்கள். இல்லையெனில் அதை சுத்தம் செய்வதற்கு கடினமாக இருக்கும்.