உங்க ஃப்ரிஜ்ல் இந்த மாதிரி இருக்கா? இல்லனா பிரச்சினை தான்!

Published : Jan 29, 2025, 12:37 PM IST

Fridge Safety Tips : ஃப்ரிட்ஜ் பயன்படுத்தும் போது அது குறித்த சில விழிப்புணர்வு விஷயங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவை..

PREV
15
உங்க ஃப்ரிஜ்ல் இந்த மாதிரி இருக்கா? இல்லனா பிரச்சினை தான்!
உங்க ஃப்ரிஜ்ல் இந்த மாதிரி இருக்கா? இல்லனா பிரச்சினை தான்!

பொதுவாக நம் வீட்டிற்கு எந்த பொருளை வாங்கினாலும் அது குறித்த சில விழிப்புணர்வு விஷயங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அது வீட்டில் வாங்கும் சிறிய பொருளாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக முழு விவரத்தையும் தெரிந்து பிறகு தான் வாங்க வேண்டும். அவற்றில் ஒன்றுதான் பிரிட்ஜ். ஒவ்வொரு வீட்டிலும் ஃப்ரிட்ஜ் கண்டிப்பாக இருக்கும். உணவு கெட்டுப் போகாமல் இருக்க பிரிட்ஜ் பயன்படுத்தி வருகிறோம். இது தவிர வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் கெட்டுப் போகாமல் பிரெஷ் ஆகவே இருக்கவும் இதை நாம் பயன்படுத்துகிறோம். இன்னும் சொல்லப்போனால் பிரிட்ஜ் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் முக்கிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. எனவே அதன் தேவை அதிகரிப்பதில் பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் ஃப்ரிட்ஜை சரியான முறையாக பராமரிக்கவில்லை என்றால், அது நீண்ட காலம் இருக்காது. சில சமயம் அது வெடித்து, அதனால் உயிருக்கே ஆபத்து விளைவுக்கும் சூழ்நிலை வந்துவிடும்.

25
பிரிட்ஜ் பராமரிப்பதற்கான டிப்ஸ்

ஆனால், ப்ரிட்ஜ்பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் அவற்றில் தான் பலவிதமான பொருட்களை வைக்கிறோம். இதனால் பலர் அதை பராமரிக்காமல் அப்படியே விட்டு விடுவார்கள். இத்தகைய சூழ்நிலையில் பிரிட்ஜ் பயன்படுத்துபவர்களுக்கான சில முக்கிய விஷயங்கள் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

35
பிரிட்ஜ் பயன்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டியவை :

1. வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக பிரிட்ஜை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். முக்கியமாக ஃப்ரிட்ஜில் அளவுக்கு அதிகமாக பொருட்களை குவித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். சொல்லப் போனால் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய பொருட்களை மட்டுமே அதில் வைக்க வேண்டும்.

2. ஃப்ரிட்ஜில் இருக்கும் காய்கறிகள் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் உடனே அதை பயன்படுத்தி விடுங்கள். ஒருவேளை அவை அழுகி இருந்தால் உடனே அதை ஃப்ரிட்ஜில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். முக்கியமாக நீண்ட நாள் அழுகிய எந்த ஒரு பொருட்களையும் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.

3. ஃப்ரிட்ஜில் இருக்கும் எல்லா ஒயர்களும் நன்றாக இருக்கிறதா என்று சரி பார்க்கவும் அவற்றில் ஏதேனும் சேதம் இருந்தால் உடனே அவற்றை மாற்றி விடுங்கள் இல்லையெனில் ஆபத்து ஏற்படும்.

45
பிரிட்ஜ் பராமரிப்பதற்கான டிப்ஸ்

4. பிரிட்ஜில் இருக்கும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அது அமுக்கி பொத்தான்தான். இதுதான் ஃப்ரிட்ஜை குளிர்விக்க உதவுகிறது. இந்த பொத்தான் சரியாக இல்லை என்றால், அதனால் கசிவு, வாயு, வெடிப்பு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே நீங்கள் அவ்வப்போது இந்த பொத்தானை சரி பார்ப்பது மிகவும் அவசியம்.

5. முக்கியமாக ஃப்ரிட்ஜை சுவரை ஒட்டி ஒருபோதும் வைக்க வேண்டாம். அப்படி வைத்தால் உடனே மாற்றி விடுங்கள். பிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே சிறிதளவு இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும். போல பிரிட்ஜை காற்று செல்லும் வசதியான இடத்தில் வைக்க வேண்டும்.

6. திடீரென ஏற்பட்டால் பிரிட்ஜ் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் மின்னழுத்தம் மாறுவதைக் கண்டறிய நிலைப்படுத்தியை பயன்படுத்துங்கள். 

இதையும் படிங்க: ஃப்ரீசரில் குவியும் ஐஸ்கட்டி.. உருளைக்கிழங்கு 'இப்படி' வைத்தால் ஐஸ் கட்டிகள் சேராது!

55
நினைவில் கொள் :

பிரிட்ஜ் வாங்கும் போது ஃப்ரிட்ஜில் உள்ள மின்சாதனங்களில் ஷார்க் சர்க்யூட் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை அதை நீங்கள் சரியாக கவனிக்காவிட்டால் சில சமயங்களில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க:  ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வைக்கவே கூடாது! ஏன் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories