
பலரையும் ஆட்டி படைக்கும் மோசமான வலிகளில் முதுகு வலியும் ஒன்று. அதை குணப்படுத்த சிலர் பல மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். ஏகப்பட்ட செலவுகளையும் செய்கின்றனர். ஆனால் சீன பயிற்சியான கிகோங் (qigong) கீழ் முதுகு வலியைக் குணப்படுத்த உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பயிற்சியை 8 வாரங்கள் செய்வதால் வலி குறையும்.
கிகோங் என்றால் சீனாவின் பாரம்பரிய உடற்பயிற்சியாகும். இது உங்களுடைய இயக்கம், சுவாசம், தோரணை மூன்றையும் ஒருங்கிணைக்கும் தியான முறையாகும்.
ஆய்வு விவரம்:
இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 8 வாரங்கள் கிகோங்கைப் பயிற்சி செய்தவர்கள் மற்றும் அந்த பயிற்சி செய்யாதவர்கள் இருதரப்பினரையும் ஒப்பிட்டார்கள். இதில் பயிற்சி செய்த இராணுவ வீரர்களின் குழுவுக்கு வலி குறைந்து நல்ல தூக்கம் கிடைத்துள்ளது. இந்தப் பயிற்சி நெகிழ்வுத்தன்மை கொண்டது. பெயின் மேனேஜ்மெண்ட் நர்சிங்கில் வெளியான ஆய்வில் நாள்பட்ட முதுகு வலியால் துடிப்பவர்களுக்கு மருந்துகள் இல்லாத சிகிச்சையாக கிகோங் பயிற்சி இருக்கும் என்ற சாத்தியங்கள் விளக்கப்பட்டது.
இதையும் படிங்க: எந்த உடற்பயிற்சியா இருந்தாலும் 'இப்படி' பண்றது தான் நல்லது தெரியுமா?
1). முதுகு வலி குறையும்
2). ஆழ்ந்த தூக்கம் வரும்.
3). உடலுக்கு நல்ல நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.
4). உடல் இயக்கம் மேம்படும்.
5). உடலில் வீக்கம் குறையும்.
6). உடலின் நீட்சி, தளர்வு, நெகிழ்வுத்தன்மை, உறுதி, சமநிலை ஆகியவை மேம்படும்.
இதையும் படிங்க: இந்த '4' உடற்பயிற்சிகள் போதும்; இனி மன அழுத்தம் இருக்காது! ட்ரை பண்ணி பாருங்க..
தசை வலிமை
முதுகுவலியை குணப்படுத்துவது தாண்டி கிகோங் தசைகள் மற்றும் மூட்டுகளை உறுதியாக்கும். இந்த பயிற்சியின் இயக்கங்கள் மூலம் தசைகள் வலிமை அடைகின்றன. மூட்டுகள் நெகிழ்வுத்தன்மையை பெறுகின்றன.
தோரணை மேம்படும்
உடலின் சமநிலையை மேம்படுத்தும். முதுகெலும்பை சீரமைத்து, வலியையும் பதட்டத்தையும் குறைக்கிறது.
மன நலன் மேம்படும்
நாள்பட்ட முதுகு வலியால் துன்பப்படும் நபர்களுக்கு பொதுவான உண்டாகும் மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றை கிகோங் பயிற்சி குறைக்கிறது.
ரத்த ஓட்டம்
கிகோங் பயிற்சி சுற்றோட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலின் ஆக்ஸிஜன் பரிமாற்றத்தை ஆதரிக்கிறது.
இந்த பயிற்சியை செய்வது எளிது. உங்கள் சுவாசம், மனம், உடல் மூன்றையும் ஒருங்கிணைத்து செய்வது அவசியம். இதில் சுவாச பயிற்சிகளுடன் மன ஒருங்கிணைப்பும் தேவை. இதில் உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்ககை மனதில் அசைபோட வேண்டும். மனதை ஒருநிலை படுத்தி தியான நிலைக்கு சென்று சுவாசப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கிகோங் இயக்கங்கள் அடுத்தடுத்த படிநிலைகளை கொண்டுள்ளதால் நேரடி வகுப்பு அல்லது ஆன்லைன் வீடியோவில் கற்பது நல்லது. இதை செய்வதால் சுறுசுறுப்பான இயக்கம், ஆரோக்கியம் கிடைக்கும்.