முட்டை வேக வைத்த தண்ணீரில் இவ்வளோ விஷயம் இருக்கா? இது தெரிஞ்சா இனிமேல் கீழே ஊத்தமாடீங்க!
முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல், மீண்டும் சில விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல், மீண்டும் சில விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
முட்டை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பதால், அசைவம் உண்ணாத சிலர் கூட ஆரோக்கிய நன்மைக்காக முட்டையை எடுத்துக் கொள்கின்றனர். அதேபோல் பாடி பில்டிங் செய்பவர்கள், ஜிம்மில் அதிக உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் முட்டையை ஏதேனும் ஒரு விதத்தில் உட்கொள்வது அவர்களின் உடலுக்கு நல்லது.
ஆம்லெட்டாக முட்டையை எடுத்துக் கொள்வதை விட அவித்த முட்டை சாப்பிடுவதே சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். முட்டையில் எந்த அளவுக்கு சத்து நிறைந்துள்ளதோ... அதே அளவில் முட்டையின் தண்ணீரிலும் சில சத்துக்கள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் முட்டையை நாம் அவிக்கும் போது, முட்டையில் உள்ள சில முக்கிய சத்துக்கள் அதன் நீரிலும் வெளியேறுகிறது.
தண்ணீர் குடிக்கும் முறை தெரியுமா? 'இப்படி' குடித்தால் கண்டிப்பா பிரச்சனை தான்!!
இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, போன்றவை தாதுக்கள் உள்ளன. இந்த முட்டை அவித்த தண்ணீரும் இது நாள் நாம் கீழே தான் ஊற்றி இருப்போம். ஆனால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள். அந்த தண்ணீரை சில விஷயங்களுக்கு நாம் பயன்படுத்த முடியும். முட்டை அவித்த தண்ணீரை ஆறவைத்து உங்கள் வீட்டில் செடிகளுக்கு ஊற்றலாம். இது செடியின் வளரும் மண்ணின் தரத்தை மேம்படுத்தி தாவரங்கள் செழித்து வளர உதவுகிறது. தொடர்ந்து முட்டையின் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி வருவதால், உங்கள் வீட்டுச் செடிகள் ஆரோக்கியமாக வளர்வதோடு அதிக பூக்களை கொடுக்கும்.
அதே போல் முடி வளர்ச்சிக்கும் முட்டையின் தண்ணீரை பயன்படுத்தலாம் என கூறுகின்றனர். இது கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் முட்டை வேக வைத்த நீரை தலை குளித்த பின்னர் தலையில் ஊற்றிக் கொள்வதன் மூலம், பொடுகு மற்றும் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சேதமடைந்த கூந்தலையும் இந்த முட்டையின் நீர் வலுப்பெறச் செய்கிறது.
கருப்பாக இருக்கும் டீ வடிகட்டியை சுத்தம் செய்வது இவ்வளவு ஈஸியா?
முட்டை தண்ணீரில் சிறிய அளவில் காரத்தன்மை இருப்பதால், கிரீஸ் அழுக்கு, கிச்சனில் உள்ள அழுக்குகளை இது எளிதாக போக்கும் என கூறப்படுகிறது. முட்டையை தண்ணீரை பயன்படுத்தும் போது, முட்டையை நன்கு கழுவிய பின்னர் தண்ணீரில் போடுங்கள். ஒரு சிலர் முட்டை அவிக்கும் போது தண்ணீரில் முட்டை உடையாமல் இருக்க, சிறிதளவு கல் உப்பு போடுவார்கள். ஆனால் செடிகளுக்கு ஊற்றும் போதும், உங்கள் தலைமுடிக்கு முட்டை அவித்த நீரை பயன்படுத்தும் போதும் அதில் தண்ணீரில் உப்பு சேர்க்காதீர்கள்.