துணிகளின் உள்புறம் வெளியில் தெரியுமாறு காய வைத்தால் துணிகள் வெயிலில் நிறம் மாறாமல் இருக்கும். உள்ளாடைகளை தனியே துவைக்கும் பழக்கத்தினை வைத்திருப்பது கிருமிகள் தொற்றை தவிர்க்கும்.
துணிமணிகளில் இருக்கும் விடாபடியான மஞ்சள் கறை நீக்குவதற்கு, கொஞ்சம் எலுமிச்சை சாற்றை அதில் தேய்த்துக் கொள்ளுங்கள்.
துணிகளின் தரத்திற்கேற்ப சோப் தூள் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஊற விடுங்கள். அதிகப்படியான அழுக்கு துணிகளில் இருந்தால் வினிகரும் பயன்படுத்தலாம்.