Cholesterol Control: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும் கொத்தமல்லி விதைகள்..! மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..!

Published : Oct 08, 2022, 11:38 AM IST

Cholesterol Control: கொத்தமல்லி விதைகளை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு முதல் கொலஸ்ட்ரால் வரை பல பிரச்சனைகளை குறைக்கலாம்.  

PREV
16
Cholesterol Control: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும் கொத்தமல்லி விதைகள்..! மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..!

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறார்கள். இருப்பினும், யாராலும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடிவதில்லை. எனினும், இதற்காக அதிகம் கவலைப்பட தேவையில்லை. இதற்கான பல இயற்கையான எளிய வழிகளும் உள்ளன. 

மேலும் படிக்க...Weight loss tips: உடல் எடையை குறைக்க ஆசையா..? அப்படினா.! இந்த 6 உணவுப் பழக்கங்களை இப்போதே கைவிட வேண்டும்..!

26

நமது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதிப்புகளை நமக்கு தருகிறது. இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளன. இது தவிர, உடற்பயிற்சி செய்யாததாலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

 

36

கொத்தமல்லி விதைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த விதைகளை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு முதல் கொலஸ்ட்ரால் வரை பல பிரச்சனைகளை குறைக்கலாம்.

 

 

46

கொத்தமல்லி விதைகளின் மற்ற நன்மைகள்

நீரழிவு நோயாளிகளுக்கு நல்லது:

கொத்தமல்லி விதைகள் கொலஸ்ட்ரால் அளவை எளிதில் குறைக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி, விதைகள் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படும்.  இந்த விதைகளில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். 

56

எடையை குறைக்க:

 உடல் எடை, தொப்பை பிரச்சனை இருப்பவர்கள். கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அதிக நன்மைகளைப் பெறலாம்.

செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை:
 
கொத்தமல்லி விதையை உட்கொள்வதன் மூலம், செரிமான அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகள்  மற்றும் குடல் நோய் போன்றவை சரி செய்யலாம். இதன் காரணமாக உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருப்பதோடு, பசியும் நன்றாக எடுக்கும்.
 

 

66

முடி மற்றும் தோல் பிரச்சனைகள்

முடி உதிர்தல், பொடுகு மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க கொத்தமல்லி விதைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். கொத்தமல்லியில் வைட்டமின் கே, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் முக்கியமான தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

மேலும் படிக்க...Weight loss tips: உடல் எடையை குறைக்க ஆசையா..? அப்படினா.! இந்த 6 உணவுப் பழக்கங்களை இப்போதே கைவிட வேண்டும்..!

Read more Photos on
click me!

Recommended Stories