இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி, இந்தியாவில் அக்டோபர் 8ஆம் தேதி மாலை தொடங்கி அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி, முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாத்தின் கடைசி தூதர் நபிகள் நாயகம் கி.பி 570 இல் ரரபீயுல் அவ்வல் 9,மெக்கா (மக்கா) நகரில் பிறந்தார்.