ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உங்களை பல்வேறு உடல்நலம் மற்றும் செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவை என்னென்னெ என்பதை பார்க்கலாம்.
இரவில் அதிக அளவில் உணவு உண்பது:
இரவு நேரத்தில் உண்பது ஆரோக்கியமானதாக கருதப்படுவதில்லை, ஏனெனில் நீங்கள் இரவில் சாப்பிட்டால், உணவை ஜீரணிக்க உங்கள் உடல் வேலை செய்ய வேண்டியிருப்பதால், உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்காது. எனவே, இந்த பழக்கத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் மிகவும் பசியாக இருந்தால், பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற இலகுவான உணவுகளை உண்ணலாம்.
உங்கள் உணவை மிக வேகமாக சாப்பிடுவது
நீங்கள் உணவை உட்கொள்ளும் போது, 15-20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்களிலோ அல்லது அதைவிட குறைவான நேரம் வெறும் உணவை உட்கொள்ளும் போது, மூளை தாமதமாக சிக்னலைக் கொடுப்பதால் நீங்கள் அதிகமாக சாப்பிடலாம். இது தேவையற்ற எடை அதிகரிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் உணவை மெதுவாகவும், நன்றாக மென்று சாப்பிடுவதையும் உறுதிப்படுத்தவும்.
சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்ப்பது:
இன்றைய நவீன உலகில் ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது நாம் தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பார்த்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதை அறியாமலேயே சாப்பிட்டு முடிப்பீர்கள். இது அதிகப்படியான உணவு உண்பதற்கு வழிவகுக்கிறது.