சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், வெறும் 5 நிமிடங்களில் 20-க்கும் மேற்பட்ட பூரிகளை எப்படி செய்வது என்ற எளிய டெக்னிக் காட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல பூரிகளைத் தேய்க்கும் இந்த முறை, உங்கள் சமையல் நேரத்தை மிச்சப்படுத்தும்.
இன்றைய அவசர உலகில் யாருக்கும் சமையல் செய்யப் போதிய நேரமில்லை. அதனால், பலர் ஆன்லைன் செயலிகள் மூலம் உணவை ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், குறைந்த நேரத்தில் எப்படி சமைப்பது என்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகின்றன.
26
யாருக்கும் தெரியாத சூப்பர் டெக்னிக்
தற்போது வைரலாகும் இந்த வீடியோவின்படி, வெறும் ஐந்தே நிமிடங்களில் 20-க்கும் மேற்பட்ட பூரிகளைத் தேய்க்க முடியும். இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, சுத்தமான முறையில் சமைக்கவும் உதவுகிறது என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். அந்த சூப்பர் டெக்னிக் என்னவென்று பார்ப்போம்.
36
பதமான உருண்டைகளை மிதமாக தயார் செய்யவும்
முதலில், பூரி செய்வதற்குத் தேவையான அளவு மாவைப் பிசைந்து கொள்ளுங்கள். பிறகு, அதைச் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல பூரிகளைத் தயாரிக்க, உங்களுக்கு பட்டர் பேப்பர் தேவைப்படும்.
ஒரு பட்டர் பேப்பரை கிச்சன் மேடை மீது விரிக்கவும். அதன் மீது, நீங்கள் செய்து வைத்த நான்கு மாவு உருண்டைகளை இடைவெளி விட்டு வைக்கவும். ஒரு உருண்டைக்கும் மற்றொன்றுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்யுங்கள்.
56
ஐடியாஇது , செம ஐடியா இது
நான்கு உருண்டைகளை வைத்த பிறகு, அதன் மீது மற்றொரு பட்டர் பேப்பரை வைக்கவும். இப்போது, மீண்டும் நான்கு மாவு உருண்டைகளை வையுங்கள். இதேபோல், மொத்தம் ஐந்து பேப்பர்களைப் பயன்படுத்தி, மாவு உருண்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும்.
66
ವಿಧಾನ 4
கடைசியாக, இந்த அடுக்கின் மீது ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, உங்கள் உடல் எடையைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கவும். பிறகு, பாத்திரத்தை எடுத்துவிட்டு, ஒவ்வொரு பட்டர் பேப்பராக எடுத்தால், தேய்த்த பூரிகள் தயாராக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.