நாம் வீடுகளில் மதியம் வடிக்கும் சாதம் மீந்து போறது சகஜம். உடனே அதை மறுநாள் தயிர் சாதம், புளி சாதம் செய்றதுதான் நம்ம வழக்கம். ஆனா, ஒரே மாதிரி செஞ்சு சாப்பிட்டா வீட்டுல இருக்குறவங்களுக்கும் போர் அடிக்கும்ல? இனி அந்த கவலை வேணாம், புதுசா டிரை பண்ணலாம்.
வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிட ஒரு சூப்பர் டிஷ் இது. ஹோட்டல் அல்லது கஃபேல கிடைக்கிற மாதிரி மொறுமொறு கட்லெட்டை, சில நிமிஷத்துல நீங்களே ஈஸியா செய்யலாம். அது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
முதலில், சாதத்துடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க. உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மசாலாக்கள், சோள மாவு எல்லாத்தையும் ஒண்ணா கலந்துக்கோங்க. கலவை ரொம்ப இளக்கமாக இருந்தால், கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்துக்கலாம். பிறகு, உங்களுக்குப் பிடிச்ச வடிவத்துல தட்டி, பிரெட் தூளில் புரட்டி எடுங்க. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பொரிச்சு எடுத்தா கட்லெட் ரெடி. ஏர் பிரையர் இருந்தா, குறைவான எண்ணெயிலயும் செய்யலாம்.
வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த கட்லெட் இப்போது சாப்பிடத் தயார். இதை புதினா சட்னி அல்லது கெட்ச்அப் உடன் பரிமாறலாம். விருப்பப்பட்டால், சீஸ் க்யூப்ஸ் அல்லது வேகவைத்த பட்டாணி போன்ற காய்கறிகளையும் இதில் சேர்க்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.