Lord Ganesha Mantras
விநாயகர் ஸ்லோகம்1:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்
கணபதி ஸ்லோகம் 2:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
Lord Ganesha Mantras
கணபதி ஸ்லோகம் 3:
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.
Lord Ganesha Mantras
விநாயகர் சதுர்த்தி நாளில் கேட்க வேண்டிய பத்தி பாடல்கள்:
பாடல் 1
கருணை பொங்கும் கற்பக நிதியே
காலம் எல்லாம் ஆளும் கதியே
உருவ விந்தையே உலகின் ஆதியே
ஒய்யார வடிவாய் அசையும் அழகே
பாடல் 2:
கற்பக நாத நமோ..நமோ
கணபதி தேவா நமோ..நமோ
கஜமுக நாத நமோ..நமோ
காத்தருள்வாயே நமோ..நமோ