அடுத்தபடியாக பூரணத்திற்கு மேல் மாவு தயார் செய்யலாம் வாருங்கள்.
1. முதலில் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
2. பிறகு அகலமான பாத்திரத்தை எடுத்து பச்சரிசி மாவை போட்டு சூடான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு கரண்டியை வைத்து மாவை நன்றாக கலந்து விடுங்கள்.
3. மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உங்கள் கையை வைத்து மாவை நன்றாக பிசைந்து, (சப்பாத்தி மாவு பிசைவதை போன்று) சிறு உருண்டையாக எடுத்து கொள்ளுங்கள்.