Vinayagar Chaturthi 2022: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்...பிள்ளையார் தோன்றிய வரலாறு மற்றும் விரத வழிபாடு முறைகள்.

First Published Aug 24, 2022, 7:00 AM IST

Pillaiyar Sathoorthi 2022: முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை போற்றி வணங்க உகந்த தினம் விநாயகர் சதுர்த்தி நாள்..

pillaiyar sathoorthi

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.

மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: அக்டோபர் 2ல் புதன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி..உங்கள் ராசி என்ன.?

Vinayakar Chathurthi

வழிபாட்டு முறைகள்:

பொதுவாக விநாயகர் அவதரித்த அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.  அதன்படி, இந்த ஆண்டில்,  விநாயகர் சதுர்த்தி நாளின் பிள்ளையாரை வழிபடுவதற்கு சுப முகூர்த்த நேரம் 31 ஆகஸ்ட் 2022 காலை 11.04 முதல் 31 ஆகஸ்ட் 2022, மதியம் 01.37 வரை ஆகும். இந்த சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள். இந்த நாளில் விநாயகர் கடவுள் உங்களுக்கு கேட்ட வரத்தை அள்ளி கொடுப்பார் என்பது காலம் காலமாக உள்ள ஐதீகம்

pillaiyar sathoorthi

வழிபாட்டு பலன்கள்;

இந்த நாளில் முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் .குழந்தை இல்லாத தம்பதிகளும் குழந்தை பாக்கியம் பெறலாம். 

குறிப்பாக, வட இந்தியாவில் இந்த துர்த்தி நாள் வெகு விமர்சையாக 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் விநாயகரின் திருவுருவம் சிலையாக வடிக்கப்பட்டு அந்த சிலைக்கு பாரம்பரிய வழியில் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறும். 
 

இந்த நாளில் அதன் வரலாற்று சிறப்புகளை பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.
 
புராணக்கதை:

பிள்ளையார் கோவில், பெரும்பாலும் குளக்கரையில் தான் இருக்கும். நீங்கள் என்றாவது இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து உண்டா..? புராணக்கதையின் படி, சிவனில் மனைவியான பார்வதி தேவி, ஒருநாள் குளிப்பதற்கான குளக்கரைக்குச் சென்றார்.  

மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: அக்டோபர் 2ல் புதன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி..உங்கள் ராசி என்ன.?

அப்போது காவலுக்கு யாரும் இல்லை, என்பதால் தான் கொண்டு வந்த மஞ்சள் கொத்தை குழைத்து  ஒரு ஆண் குழந்தை உருவத்தைப் பிடித்து அதற்கு உயிர் கொடுத்தார்.

பார்வதி தேவியால் உயிர் கொடுக்கப்பட்ட அந்த உருவம் அவருடைய பிள்ளை ஆகிவிட்டது. பிறகு அந்த குழந்தையிடம் நான் குளிக்க செல்கிறேன். யார் வந்தாலும் உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தி விட்டு சென்றார்.

அப்போது, திடீரென்று அங்கு வந்த சிவபெருமான், உள்ளே நுழைய முயன்றார். ஆனால் பிள்ளையார் உள்ளே அனுமதிக்கவில்லை அவர் எடுத்துக் கூறியும், தன் தாய் உத்தரவை யாரும் மீற முடியாது என கூறி சிவனை தடுத்தார். இதனால், கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை துண்டித்து விட்டு உள்ளே சென்றார்.

பார்வதி தேவி நீராடி முடித்ததும் வெளியே வந்து பிள்ளையாருக்கு தலை இல்லாததைப் பார்த்தது கடும் கோபமும், ஆவேசமும் அடைந்தார். சிவன் நடந்ததை கூற மனமுடைந்த பார்வதி தேவி, தான் உருவாக்கிய குழந்தையை நினைத்து அழுது புலம்பினார். மீண்டும் உயிர் தரும்படி சிவனிடம் கேட்டுக் கொண்டார்.

அதனால் பூத கணங்களை அனுப்பி எந்த ஒரு குழந்தை தாய் வேறு திசை நோக்கியும், பிள்ளை வடக்கில் தலை வைத்து படித்திருக்கிறதோ அதன் தலையை வெட்டி எடுத்து வாருங்கள் என உத்தரவிட்டார்.

அவர் கூறிய படியே தேவர்களும் வடதிசை நோக்கிச் சென்ற போது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் கிடைத்தது. தேவர்களும் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று சிவனிடம் கொடுத்த நிலையில், யானையின் தலையை வெட்டுப்பட்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிர் கொடுத்தார் .

pillaiyar sathoorthi

இதை பார்த்ததும்  பார்வதி தேவியார் மனமகிழ்ந்து சாந்தமடைந்தார். இதையடுத்து,  அந்தப் பிள்ளையாருக்கு 'கணேசன்' என பெயர் வைத்து கமது தேவர்களுக்கு தலைவராக நியமித்ததாக  புராணத்தில் தெரிவிக்கப்படுகிறது.  இதுவே பிள்ளையாரின் அவதாரக் கதையாகும்.

மேலும் படிக்க...Budhan Peyarchi 2022: அக்டோபர் 2ல் புதன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி..உங்கள் ராசி என்ன.?

click me!