Health: உடலுக்கு ஆரோக்கியம் அள்ளித் தரும் வாழைப்பழம் தேன் காம்பினேஷன்..தினமும் எப்படி சாப்பிடுவது தெரியுமா..?

First Published Aug 23, 2022, 4:44 PM IST

Health Food: உடலில் பல்வேறு நோய்களை நீங்கி ஆரோக்கியம் தரும் உணவுகளில் தேனும் வாழையும் ஒன்று சேர்ந்தால் அதிக சத்துக்கள் கிடைக்கும்.

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் முக்கனிகளுள் வாழைப்பழம் ஒன்றாகும். வாழைப்பழம், ஒவ்வொன்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ பயன்களையும் உள்ளடக்கியவையாக உள்ளன.  அதேபோலத் தான் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாதது: இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, இவற்றை ஒன்றாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க ...பாத்ரூம் முழுவதும் கரப்பான் பூச்சி பல்லி, தவளை தொல்லையா.? முற்றிலும் ஒழிக்க இந்த ஒரு விஷயம் செய்தால் போதும்...

வாழைப்பழத்தில்  ஆன்டி ஆக்ஸிடன்கள் விட்டமின் பி6, விட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பல வகையான வைட்டமின்கள் பல பிரச்சனைகளில் இருந்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அதேபோன்று, தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாகும். தேன் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க ...பாத்ரூம் முழுவதும் கரப்பான் பூச்சி பல்லி, தவளை தொல்லையா.? முற்றிலும் ஒழிக்க இந்த ஒரு விஷயம் செய்தால் போதும்...

 சருமத்திற்கு நல்லது:|

வாழைப்பழத்துடன், தேன் சேர்த்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி சத்து இருப்பதால், சருமத்தின் பொலிவை அதிகரிப்பது மட்டுமின்றி, சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் நீக்கும்.

வைரஸைக் குணப்படுத்த:

வாழைப்பழம் மற்றும் தேன் ஆகியவை உடலின் குளிர்ச்சியை போக்க  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு கலவைகளும் வைரஸைக் குணப்படுத்துவதோடு, உடலில் இருக்கும் தொற்றுநோயை அகற்றவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் எடை:

பொதுவாகவே வாழைப்பழத்தை பால் அல்லது பால் சார்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது ஆனால், நீங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் உணவில் வாழைப்பழம் மற்றும் தேன் இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த இரண்டின் கலவையும் பசியைக் கட்டுப்படுத்து உடல் எடையை பராமரிக்கும். 

செரிமான பிரச்சனை:

வாழைப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடுவது வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது. குறிப்பாக, செரிமான பிரச்சனை இருந்தாலும் தவிர்க்கலாம். செரிமானக் கோளாறு, இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பாதிப்பு கொண்டிருக்கும் நபர்கள் வாழைப்பழத்துடன் தேன் சேரும்போது, வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்தின் திறன் மேம்படுகிறது.மேலும்,  இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. 

மேலும் படிக்க ...பாத்ரூம் முழுவதும் கரப்பான் பூச்சி பல்லி, தவளை தொல்லையா.? முற்றிலும் ஒழிக்க இந்த ஒரு விஷயம் செய்தால் போதும்...

click me!