Cockroaches, lizards at home:
இவற்றை முற்றிலும் ஒழிப்பது, மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில், இவை எளிதில் குட்டி போட்டு தன்னுடைய வம்சத்தை பெருக்க கூடியவை..நாம் எவ்வளவு தான் முயற்ச்சி செய்து அழித்தாலும், எங்கிருந்தாவது வந்து கொண்டே தான் இருக்கும். எனவே, நாம் இவற்றை மிகவும் சுலபமான முறையில் கட்டுப்படுத்த துவங்கிவிட்டால், இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விடும். இறுதியில், முற்றிலும் அழிந்து போய் விடும்.
Cockroaches, lizards at home:
அதற்கு முதலில், நம்முடைய வீடுகளில் பீரோவில் துணிகளுக்கு இடையில் போட்டு வைக்கும் பாச்சா உருண்டை எனப்படும் நாப்தலின் பால்ஸ் சிலவற்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த நாப்தலின் பந்துகளை பாத்ரூம்களில் எங்காவது மூலைக்கு மூலை போட்டு வைக்கலாம். இப்படி செய்தால், இவற்றின் வாசம் மூலை முடுக்குகளில் மறைந்துள்ள கரப்பான் பூச்சி, பல்லி, தவளை போன்றவற்றை அண்ட விடாமல் ஓட ஓட விரட்டிவிடும். குறிப்பாக கரப்பான் பூச்சி தொல்லை சுத்தமாக இருக்காது.
Cockroaches, lizards at home:
அதேபோன்று, கழிவறையில் இருக்கும் தண்ணீர் நிரம்பும் டேங்கில் மேற்பூரத்தில் ஓரிடத்தில் நனையாத படி வைத்து விட்டால், ஒவ்வொரு முறை ஃபிளஷ் செய்யும் பொழுதும் நல்ல ஒரு நறுமணம் வீச துவங்கும். இதனால், உங்கள் பாத்ரூமில் துர்நாற்றம் நீங்கி ஒருவித நறுமணம் வீசும்.