Nattu Kozhi Varuval in tamil: தெருவே மணக்கும் சுவையான நாட்டுக்கோழி வறுவல் எப்படி செய்து அசத்துவது..என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்
1. முதலில் 1 கிலோ நாட்டுக்கோழியை வாங்கி கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் 250 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நாட்டுக் கோழி வறுவலை செய்ய தொடங்கலாம்.
45
Nattu Kozhi Varuval in tamil:
2. அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, சோம்பு சேர்த்து வதக்க வேண்டும்.
3. பின்னர், அதனுடன் கருவேப்பிலை, வர மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கி வந்தவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் சேர்த்து தேவையான அளவு உப்பு, போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
4. அதன் பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை கடாயில் போட்டு எண்ணெயில் இரண்டு முறை கலந்து விட்டு தனி மிளகாய்த்தூள் போட்டு, தண்ணீர் 1/2 லிட்டர் ஊற்றி மிதமான தீயில் வைத்து 25 லிருந்து 30 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
5. குழம்பு நன்றாக கொதித்து கோழி வெந்து அப்படியே செமி கிரேவியாக எண்ணெய்ப் பிரிந்து நமக்கு வரும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.அத்துடன் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், சிவையான நாட்டுக்கோழி வறுவல் தயார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.