இந்த முறையில் இறந்தவர்களின் உடலை இறுதிச் சடங்குகள் செய்து புதைக்கவோ அல்லது எரிக்கவோ மாட்டார்கள். இவர்களின் உடல் அழுகிய நிலையில் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'மூன்றாம் வ்லாட் ட்ராகுலா' என்பவர் கழுவேற்றம் குறித்த வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். ருமேனியாவின் வல்லாஹியா பகுதியின் இளவரசரான இவருக்கு, 'கழுவேற்றும் வ்லாட்' (Vlad the Impaler) என்று மற்றொரு பெயரும் உண்டு.