பூண்டு தோலில் இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால் இனி நீங்கள் பூண்டு தோலை..தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..

Published : Aug 23, 2022, 07:02 AM IST

Garlic peel health benefits: நாம் குப்பையில் தூக்கி வீச கூடிய பூண்டின் தோலை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் .

PREV
15
பூண்டு தோலில் இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால் இனி நீங்கள் பூண்டு தோலை..தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..
Garlic:

பூண்டு தோலை உரித்து விட்டு நம்மில் பலர் குப்பையில் தூக்கி போடுவோம். ஆனால், நீங்கள் குப்பையில் வீசும் பூண்டு தோலில் இருக்கும் மகத்துவம் தெரிந்தால் இனி நீங்கள் குப்பையில் தூக்கி வீச மாட்டீர்கள். ஏனெனில், பூண்டில் எந்த அளவிற்கு மருத்துவ குணம் உள்ளதோ..? அதே அளவிற்கு தான் பூண்டு தோலிலும் மருத்துவ குணம் உள்ளது. எனவே, நாம் குப்பையில் தூக்கி வீச கூடிய பூண்டின் தோலை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் . 


மேலும் படிக்க....பாத்திரம் கழுவும் சிங்க், பாத்ரூம் சிங்க் போன்றவற்றில் அடிக்கடி அடைப்பு ஏற்படுதா? சுத்தம் செய்ய மேஜிக் டிப்ஸ்!

25
Garlic peel health benefits:

டிப்ஸ்1:

நீங்கள் தலைக்கு குளித்து விட்டு சாம்பிராணி  தூபம் போடும் போது, அதில் கொஞ்சம் பூண்டு காம்புகள், பூண்டு தோல்களை போட்டு விடுங்கள். குறிப்பாக, இந்த தூபம் குழந்தைகளுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு  மிகவும் நல்லது.இதனால் அவர்களுக்கு வரும், மன அழுத்தம், தலைபாரம், சளி தொந்தரவு வராமல் இருக்கும். 

35
Garlic peel health benefits:

டிப்ஸ் 2:

நீங்கள் ஒரு சிறிய காட்டன் துணியில் இந்த பூண்டு தோலை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடு செய்துவிட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். சூடாக இருக்கும் பாத்திரத்தின் மேலே இந்த பூண்டு தோலை வைத்து விட வேண்டும். பிறகு, இந்த முடிச்சை எடுத்து முகரும் போது நமக்கு ஒரு நல்ல வாசம் வரும். இதனால்  பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை சில பேருக்கு தொடர்ச்சியாக இருக்கும் இருமல், சுவாச பிரச்சனை, மூக்கடைப்பு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் தீரும். 

மேலும் படிக்க....பாத்திரம் கழுவும் சிங்க், பாத்ரூம் சிங்க் போன்றவற்றில் அடிக்கடி அடைப்பு ஏற்படுதா? சுத்தம் செய்ய மேஜிக் டிப்ஸ்!

45
Garlic peel health benefits:

டிப்ஸ் 3:

பூண்டு தோலை ஒரு துணி பையில் போட்டு ஒரு முடிச்சு போட்டு தலையணை போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கும் போது இந்த பூண்டு தோல் தலையணையில், தலை வைத்து படுத்தால் உங்களுடைய தலைபாரம் குறையும். அதிலிருந்து வெளிவரும் வாசத்தை சுவாசித்தாலே போதும். மன அழுத்தம் குறையும், ஒரு புதிய புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த குறிப்புகள் அனைத்துமே இயற்கையின் வரப்பிரசாதம் ஆகும். இதில் எதையுமே நாம் சாப்பிடப் போவது கிடையாது. லேசாக முகர்ந்து தான் பார்க்கப் போகின்றோம். ஆக, பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு மாற்றம் நிகழும். 

 

55
Garlic peel health benefits:

பின் குறிப்பு: ஒருபோதும் பூண்டு தோலை பிளாஸ்டிக் கவரில் போட்டு, தலைக்கு வைத்து படுக்கக் கூடாது. துணி பையை தான் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க....பாத்திரம் கழுவும் சிங்க், பாத்ரூம் சிங்க் போன்றவற்றில் அடிக்கடி அடைப்பு ஏற்படுதா? சுத்தம் செய்ய மேஜிக் டிப்ஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories