சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட் போன்ற அன்றாட பயன்பாட்டுப் பொருட்களில் அவை சைவமா அல்லது அசைவமா என்பதைக் குறிக்க குறிப்பிட்ட நிறப் புள்ளிகளைப் பயன்படுத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
Veg Non Veg Symbol: சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பிற அன்றாட டாய்லெட்ரிகளில் சைவ-அசைவ லேபிளிங் முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. Legal Metrology (Packaged Commodities) Rules, 2011-இல் திருத்தம் செய்து, 2026 செப்டம்பர் 21 அன்று அறிவிக்கப்பட்டது. சைவ மூலப்பொருட்களால் ஆன பொருட்களில் பச்சை நிற புள்ளி, அசைவ மூலப்பொருட்களால் ஆனவற்றில் சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளி இருக்க வேண்டும். இது பொருளின் முதன்மை காட்சிப் பகுதியின் மேற்பகுதியில் தெளிவாக இருக்க வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் பார்த்தவுடனே பொருள் சைவமா அல்லது அசைவமா என்பதை எளிதாக அறியலாம். இந்த விதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
29
லீகல் மெட்ராலஜி விதிகளில் திருத்தம்
‘இந்தியா டுடே’ அறிக்கைப்படி, சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட் போன்ற பொருட்களில் சைவ-அசைவ லேபிளிங் விதியைக் கொண்டுவர, அரசு ‘லீகல் மெட்ராலஜி (பேக்கேஜ்டு கமாடிட்டீஸ்) விதிகள், 2011’-ல் திருத்தம் செய்துள்ளது. இந்தப் புதிய திருத்தம் திங்கள்கிழமை (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வந்துள்ளது. சைவப் பொருட்களில் பச்சைப் புள்ளி, அசைவப் பொருட்களில் சிவப்பு அல்லது பழுப்புப் புள்ளி இருக்க வேண்டும். இது பொதின் முதன்மைப் பகுதியின் மேலே தெளிவாக இருக்க வேண்டும்.
39
பேக்கிங்கில் இனி கலர் டாட் கட்டாயம்
புதிய விதிகளின்படி, சைவப் பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களின் பேக்கிங்கில் பச்சை நிறப் புள்ளி (Dot) இருக்க வேண்டும். அதேசமயம், அசைவப் பொருட்களுக்கு சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளியைக் காட்ட வேண்டும்.பேக்கிங்கில் இனி கலர் டாட் கட்டாயம்
பொருளின் பேக்கிங்கில் முன்பக்கத்தின் (main display panel) மேல் பகுதியில் இந்த குறியீட்டை வைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும்போது அதன் தன்மையை எளிதாக அடையாளம் காண உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
59
சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட்
இந்த புதிய அறிவிப்பின் கீழ் முக்கியமாக சோப்பு, ஷாம்பு, டூத்பேஸ்ட் மற்றும் பிற அழகுசாதனப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
69
கட்டாயமாகும் குறியீடு பயன்பாடு
அதிகமாகப் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களில் இந்தக் குறியீட்டைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் வாங்கும் முன்பே அது சைவமா, அசைவமா என்பதை பேக்கிங்கைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
79
லீகல் மெட்ராலஜி
இந்தத் திருத்தத்தின் மூலம், 'லீகல் மெட்ராலஜி' கட்டமைப்பின் கீழ் பொருட்களின் பேக்கேஜிங் தகவல்களுக்கு ஒரு குறிப்பிட்ட விதிமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
89
கலர் குறியீடுகளின் முக்கிய நோக்கம்
பொருட்களில் என்னென்ன சேர்க்கப்பட்டுள்ளது என்பதை முழுமையாகப் படிக்காமலேயே, அது சைவமா அசைவமா என்பதை வாடிக்கையாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த கலர் குறியீடுகளின் நோக்கமாகும்.
99
உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு
இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், சம்பந்தப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இனி பேக்கேஜிங்கில் இந்த லேபிளிங் விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.