நம்முடைய வீடுகளில் கண்டிப்பாக உப்பு, புளி, மிளகாய் இருக்க வேண்டும் என்பார்கள், தீர்ந்து போவதற்கு முன்பாகவே இவற்றை கண்டிப்பாக வாங்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டில் தரித்திரம் வந்து தாண்டவமாடும் என்பார்கள். அதேபோன்று , முக்கியமாக நம்முடைய வீடுகளில், உள்ள சமையல் அறையில் இந்த தவறு மட்டும் நடக்கவே கூடாது. அந்த காலத்தில் நம்முடைய பாட்டி அம்மா எல்லாம் இந்த ஒரு விஷயத்தில் கவனமாக இருப்பார்கள்.