சமையலறையில் அடிக்கடி பயன்படும் குறிப்புகள்..இல்லத்தரசிகள், நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய 7 பெஸ்ட் ஐடியாக்கள்

First Published | Oct 27, 2022, 7:03 AM IST

Useful cooking tips in Tamil: சமையலறையில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால், சமைக்கு போது இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும். அவை என்னென்னெ என்பதை பார்ப்போம்.

ஒருவரது வீட்டில் சமையல் அறையே அனைத்து செயல்பாட்டின் மையப் புள்ளியாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து சமைக்கவும், நண்பர்கள், குடும்பத்தினருடன் நன்கு பழகவும் உகந்த இடமாக சமையல் அறை உள்ளது.

மேலும் படிக்க...Kitchen cleaning: தினமும் கஷ்டப்படாமல் சமையல் செய்ய..இல்லத்தரசிகள் இந்த 8 ஐடியாக்கள் தெரிஞ்சுக்கிட்டாலே போதும்

பொதுவாக சமையல் அறையில் நாம் சில விஷயங்களை சிரமப்பட்டு செய்து கொண்டிருப்போம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால், சமைக்கு போது இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும். அவை என்னென்னெ என்பதை பார்ப்போம்.

Latest Videos


டிப்ஸ் 1: 

அசைவம் சமைத்த பிறகு பார்த்தால் நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வீசிக்கொண்டே இருக்கும். இது போன்ற கெட்ட வாடை வராமல் தடுக்க, எல்லா இடத்திலும் முதலில் ஒரு சிறிய துண்டு புளியை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள். அதன் பின்பு, வாசம் நிறைந்த பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றி கழுவி விட்டால் அசைவ வாடை உங்களுக்கு சுத்தமாக வராது.

டிப்ஸ் 2:

சில சமயம் வெல்லத்தை துருவ வேண்டும் என்றால், காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சிரமம் இல்லாமல், சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு கிடைக்கும்.

 டிப்ஸ் 3:

வெயில் காலத்தில் தயிர் சீக்கிரம் புளித்து போய்விடும். அப்படி, தயிர் புளிக்காமல் இருக்க அதில் நசுக்கிய இஞ்சி, ஒரு துண்டு தேங்காய் பத்தை இரண்டையும் தயிரில் போட்டு வைத்தால் தயிர் சீக்கிரம் புளித்து போகாது.

டிப்ஸ் 4: 

அதேபோல், நெய் ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்க, நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை போட்டு வைத்தால் போதும்.

டிப்ஸ் 5:

அதுபோன்று, நீங்கள் வெங்காயம் நறுக்கும் போது,கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது.

டிப்ஸ் 6:

நீங்கள் சமைத்த உணவுப் பொருளில் உப்பு அதிகமாகி விட்டதா, இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டால் உப்பு சரியாகிவிடும். அதேபோன்று, குழம்பில் உப்பு அதிகமாகி விட்டதா ஒரு துண்டு வெல்லத்தை சேர்க்கவும்.

மேலும் படிக்க...Kitchen cleaning: தினமும் கஷ்டப்படாமல் சமையல் செய்ய..இல்லத்தரசிகள் இந்த 8 ஐடியாக்கள் தெரிஞ்சுக்கிட்டாலே போதும்

டிப்ஸ் 7;

சில சமயம் நாம் வைத்திருக்கும் தோசை மாவில் தோசை சரியாகவே வராது. அதேபோன்று, தோசை மாவு கொஞ்சம் தான் இருக்கிறது என்றால் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அந்த மாவில் தோசை வார்த்து பாருங்கள். கல்லில் தோசை ஒட்டாமலும் வரும். அதே சமயம் தோசையில், புளிப்பு தெரியாமலும் இருக்கும்.

click me!