நவம்பர் 11 முதல் நவம்பர் 24 வரை நிகழும் கிரக பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாக மாறும்..!

First Published | Oct 27, 2022, 3:02 PM IST

நவம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், நவம்பர் 11 முதல் நவம்பர் 24 வரை, முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி சிலரது வாழ்க்கையை அப்படியே புரட்டி போடும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
 

நவம்பர் மாதம் நிகழும் கிரக பெயர்ச்சி 2022: ஒவ்வொரு மாதமும் பல முக்கிய கிரகங்கள் தனது ராசியை மாற்றியுள்ளனர். இது சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கொடுக்கும். அதன்படி, நவம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், நவம்பர் 11 முதல் நவம்பர் 24 வரை, 5 முக்கிய கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றுமொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகப் போகின்றன.

ஆம், நவம்பர் 11ம் தேதி ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் மீனத்தில் தனது ராசியை மாற்றுகிறது. அதேபோன்று 13ம் தேதியில் புத்தி மற்றும் பேச்சின் கடவுளான செவ்வாய் மற்றும் புதனும், 16ம் தேதி சூரிய பகவானும், 24ம் தேதி வியாழன் அல்லது குரு பகவான் மீன ராசி வகர நிவர்த்தி ஆகின்றனர். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்...மேஷம் ராசிக்கு செலவு..! மிதுனம் ராசிக்கு முதலீடு..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?


மேஷம்

இந்த ராசிகளுக்கு குருவின் மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் தொழிலில் லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், சூரியனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களை பொருத்தவரை, அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். இதுமட்டுமின்றி, குடும்ப மற்றும் நிதிப் பிரச்சனைகளாலும் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் சுக்கிரன் மாற்றத்தால், இந்த ராசிகளுக்கு நிதி ரீதியாக வலுப்பெறுவார்கள். 

Sun and Venus Transit

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நவம்பரில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.இந்தக் காலத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். புத்திசாலித்தனமாக நடக்க வேண்டிய நேரம் இதுவாகும். ரியக் கடவுள் மற்றும் குரு பகவான் நல்ல நிலையில் இருப்பதால் நன்மைகள் கிடைக்கும்.இதனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நீதிமன்ற விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

Sun and Venus Transit


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பரில் கிரகங்களின் சஞ்சாரம் பலன் தரும். கடக ராசிக்காரர்களுக்குவருமானம் கூடும். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும்.. இந்த நேரத்தில் இவர்கள் வியாபாரத்தில் லாபம் பெறலாம். அதே சமயம் மாணவர்களுக்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும்.  இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களின் அதிகப்படியான சோம்பலை விடுங்கள். தொடர்ந்து உடற்பயிற்சிசெய்யவும்.  

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரப்போகிறது. அதே சமயம் செவ்வாய்ப் பெயர்ச்சியால் வருமானம் குறையும், செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பண இழப்பு போன்றவை ஏற்படலாம். ஆனால், வியாபாரத்தில் இவர்களுக்கு புதன் பலன்களை அள்ளித தரும். அதே நேரத்தில் தொழில் தொடங்க சாதகமாக இருக்கும். 

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்...மேஷம் ராசிக்கு செலவு..! மிதுனம் ராசிக்கு முதலீடு..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

Latest Videos

click me!