ஒரு தாய் தனது கருவை இழக்கும் போது, கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நாளில் இருந்து அவள் திட்டமிட்டிருந்த முழு கனவுகளையும் இழக்கிறாள். இதனால், கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் மிகுந்த மன உளைச்சலை உணர்கிறார்கள். மேலும், மனச்சோர்வில் இருந்து விடுபட முடியாமல் தவிர்க்கும் நிலை ஏற்படும்.
இதனால், நீண்ட நாள் மன அழுத்தம் மற்றும் மன ரீதியான நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, இது போன்ற சமயங்களில் அந்த பெண்களை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தையை இழந்த பெண்களுக்கு தோன்றும் மனச்சோர்வின் அறிகுறிகள்:
நம்பிக்கையற்றதாக உணர்வது, எடை இழப்பு, பசியின்மை, ஒழுங்கற்ற தூக்க முறைகள், ஓய்வின்மை, தேவையற்ற குற்ற உணர்வு, பிடித்த செயல்களில் ஆர்வம் இல்லாமை மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்றவை மனச்சோர்வின் அறிகுறிகள் ஆகும்.
இந்த நேரத்தில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுங்கள். வழக்கமாக செய்வதை போல சமைத்து கொடுக்காதீர்கள். ஒரு போதும் அவர்களை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.
சில நேரங்களில் பெற்றோர்களின் சோகம் கண்டிப்பாக அவர்களின் முதல் குழந்தையையும் தாக்கி விடும். எனவே, அந்த குழந்தையை சில நாட்கள் பெற்றோரின் சம்மதத்தோடு நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.
இந்த நேரம் அவர்களை பார்க்க செல்லும்போது ஏதாவது அவர்களுக்கு பிடித்த அன்பளிப்புகளை வாங்கி செல்லுங்கள். கண்டிப்பாக அது குழந்தைகளை நியாபக படுத்துவதாக இருக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இது போன்ற சூழல்களில் அவர்களின் மனநிலை மாறிக் கொண்டே இருக்கலாம். எனவே, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இத்தகைய காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனிமையாக இருப்பதாக உணர்வார். இது தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.
மேலும், எந்த விதத்திலும் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று கட்டாய படுத்த வேண்டாம். போகிற போக்கில் அவர்களை விட்டு விடுவது நல்லது.