New year 2023 Gift Ideas: செலவு கம்மியா புடிச்சவங்களுக்கு இந்த கிப்ட் கொடுங்க அசந்து போயிடுவாங்க!

Published : Dec 29, 2022, 07:15 PM ISTUpdated : Dec 29, 2022, 07:22 PM IST

விழாக்காலங்களில் பரிசு பொருள்களை வாங்குவதும், கொடுப்பதும் பண்பாடு. கவுரவத்திற்காக பரிசுகளை கொடுத்துவிட்டால் மட்டும்போதாது. அது வாங்குபவர்களுக்கு உபயோகமாகவும் இருக்கவேண்டும். 

PREV
14
New year 2023 Gift Ideas: செலவு கம்மியா புடிச்சவங்களுக்கு இந்த கிப்ட் கொடுங்க அசந்து போயிடுவாங்க!

பரிசு பொருள்கள் என்பவை ஞாபகச் சின்னங்கள். அதனை கொடுக்கும்போது அர்த்தமுள்ளவையாகவும், பயன்படுவதாகவும் இருந்தால் நீண்ட காலம் நினைவில் தங்கும். அப்படியான எளிய பரிசு பொருள்களை இங்கு காணலாம். 

நீங்கள் கொடுக்கும் பரிசு பொருள்கள் அவர்களுக்கு பிடித்தமான பொருள்களாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நீண்டகாலமாக உங்கள் நண்பரோ, காதலியோ வாங்க நினைத்த பொருள் என்னவென தெரிந்து கொள்ளுங்கள். அதனையே கொடுத்து அசத்துங்கள். 

இதையும் படிங்க; Happy new year wishes 2023: பிரியமானவர்களுக்கு பிரியங்கள்... இதோ உங்களுக்கான புத்தாண்டு வாழ்த்து குறிப்புகள்! 

24

ஊட்டச்சத்துகளை கொடுக்கலாமே! 

உங்களுடைய விருப்பமான நபருக்கு உலர் பழங்கள், பாதம், பிஸ்தா போன்ற ஊட்டச்சத்து நிரம்பிய பொருள்களை பரிசாக வழங்கலாம். தானியங்கள் தயாரான சத்துமாவு போன்ற ஆரோக்கியமான பரிசுகளை வழங்கி புத்தாண்டை தொடங்க வழிகாட்டுங்கள். 

34

புத்தகங்களை வழங்கலாம்!

நல்ல புத்தகங்களை வழங்கி வாசிப்பு பழக்கத்திற்கு வித்திடலாம். வாசிப்பு ஒருவரின் வாழ்க்கையை மாற்றியமைக்க கூடிய வல்லமை கொண்டது. புதிய புத்தகங்கள் வாங்க முடியாவிட்டால், இரண்டாம் முறை பயன்பாட்டுக்கு வந்திருக்கும் பழைய புத்தங்களை கூட வாங்கி கொடுக்கலாம். சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பல புதிய புத்தகங்கள் வெளியாகியுள்ளன. காதலிக்கு பரிசளிக்க யாத்திரி, மனுஷ்யபுத்திரனின் கவிதை தொகுப்புகள் நல்ல சாய்ஸ். 

வாட்ச் 

நேரத்தின் மதிப்பு தெரியாத நபர்களாக இருந்தால் கைக்கடிகாரம் ஒன்றினை பரிசளித்து நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வலியுறுத்துங்கள். 

 

44

கேஜட்ஸ் 

புத்தாண்டு சலுகையில் ஐபோன் தொடங்கி ஸ்மார்ட் வாட்ச் வரை பல கேஜட்டுகள் கிடைக்கின்றன. அதில் உங்கள் விருப்பமானவருக்கு பிடித்த கேஜட்டுகளை வாங்கி பரிசளிக்கலாம். 

இசையே பரிசு!

எல்லா காலங்களிலும் மனதை இலகுவாக்கும் இசையை உங்கள் விருப்பமானவருக்கு பரிந்துரையுங்கள். ஒரு ஹெட்போன் வாங்கி அதனுடன் 'உன் துயரங்களை மறந்து இசைக்குள் வாழ்' என எழுதி கொடுங்கள். நிச்சயம் அவருக்கு பிடிக்கும். 

 

click me!

Recommended Stories