லட்சியத்தை நோக்கி செல்ல வாழ்த்துகள்
இந்தப் புத்தாண்டில் புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கும், ஏற்கனவே இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கும் இந்த வாழ்த்தை கூறுங்கள்.
"இலக்கு நோக்கி செல்வது வெற்றிக்காக இருக்கலாம். ஆனால் வெற்றியின் பயணத்தில் சின்ன விஷயங்களின் மகிழ்ச்சியை அனுபவிக்க மறக்காதீர்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்"
புது தம்பதிக்கு வாழ்த்துகள்
திருமணமான புது தம்பதியினருக்கு வரும் ஆண்டும் வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம். அவர்களின் வாழ்த்து சிறக்க இந்த வாழ்த்தை அனுப்புங்கள்.
"ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அத்தியாயம். எந்த நிலை வந்தாலும் இணைந்தே கடந்து செல்லுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்"
காதலிக்கும் நபருக்கு வாழ்த்துகள்
காதலிக்கும் காலம் எல்லோருக்குமே பொற்காலமாக இருக்கும். ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்க்கையை நகர்த்த புரிதலில் இருக்கும் உங்கள் பாட்னருக்கு இந்த வாழ்த்தை அனுப்புங்கள்.
"இன்னும் அதிகமான புரிதலுக்கும், அன்புக்கும் இந்த ஆண்டில் இணைந்திருப்போம். இன்னும் கொஞ்சம் கூடுதல் காதலுடன். புத்தாண்டு வாழ்த்துகள்"
பெற்றோருக்கு வாழ்த்துகள்
பொறுப்புகளையும், கடமைகளையும் நோக்கி கவனத்தை செலுத்தி தங்களுக்கென நேரம் ஒதுக்காத பெற்றோருக்கு இந்த வாழ்த்தை தெரிவியுங்கள்.
"எல்லா கடமைகளையும் பொறுமையாக செய்து கொள்ளலாம். உங்கள் உடல், மன நலனுக்கு நேரம் ஒதுக்குங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்"
நண்பர்களுக்கு வாழ்த்துகள்
எல்லா சூழ்நிலைகளிலும் உடனிருக்கும் நண்பர்களுக்கு கூடுதலான அன்போடு வாழ்த்தை அனுப்புங்கள்.
"எல்லா காலங்களிலும் உடனிருக்கும் தோழமைக்கு நன்றி. இனியும் இணைந்து பயணிப்போம். புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பா"