வாழ்க்கையை மாற்றும் 5 முடிவுகள் புத்தாண்டில் இந்த தீர்மானத்தை எடுங்க!

First Published | Dec 28, 2022, 6:13 PM IST

நம்முடைய வெளித்தோற்றம் முதல் ஆரோக்கியம் வரை அனைத்துமே வாழ்க்கை முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில பழக்கங்கள் நம் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிடும். 

தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் புதிய தீர்மானத்தை எடுத்து அதை கடைபிடிப்பர். சிலர் தீர்மானங்களை எடுப்பதோடு சரி அதை பின்பற்றுவது இல்லை. இதனால் அவர்களது வாழ்க்கை முறையில் பெரிதாக முன்னேற்றம் இருக்காது. ஆனால் இந்தப் புத்தாண்டை பின்வரும் சில முடிவுகளுடம் நீங்கள் கொண்டாடினால்  வாழ்வில் பல மாற்றங்களை சந்திப்பீர்கள். 

நல்ல தூக்கம் 

நிம்மதியான வாழ்க்கைக்கு முறையான தூக்கம் அவசியம்.  உங்களுடைய தூக்க சுழற்சி சரியான அளவில் இல்லை எனில் மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள்.  தாமதமாக தூங்குவது பலருக்கும் பழக்கமாக இருந்தாலும், இது ஆரோக்கியத்தில் கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடலுக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். புத்தாண்டில் இருந்து உங்களுடைய தூக்கத்தை முறையாக மேற்கொள்ளுங்கள். 

Tap to resize

சுத்தத்தில் கவனம் 

கொரோனா வந்த பிறகு, நம் வாழ்வில் சுகாதாரத்தின் பங்கு அதிகமாகிவிட்டது. சுகாதாரம் என்பது வீட்டை சுத்தம் செய்வது மட்டுமல்ல, வெளியில் காலணிகளை கழற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களையும் சரியாக பேணுவது ஆகும். கை கழுவிய பிறகுதான் ஏதாவது சாப்பிடுவேன் என மனதினுள் உறுதி எடுத்து கொள்ளுங்கள். இது தவிர, உங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்களை அறையை சுத்தமாக வைத்து கொள்வதில் கவனமாக இருங்கள். 

உடற்பயிற்சி முக்கியம்

புத்தாண்டில் உங்கள் உடற்பயிற்சியில் அதிக கவனம் எடுத்து கொள்ளுங்கள். உடற்பயிற்சியே செய்யாதவர்கள் இனியாவது செய்யலாம். மிதமான உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் உயர்-தீவிர இடைவெளி பயிற்சியை (HIIT) செய்யலாம். ஹிட் ( HIIT) பயிற்சிகள் இன்சுலின் எதிர்ப்பையும் கணிசமாகக் குறைக்கிறது. 

தியானம் பண்ணுங்க! 

இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில், மனிதன் தனக்கென நேரம் ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு மூன்றாவது நபரும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் வாழ்கிறார் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவும் பல நோய்களுக்கு வழி கோலுகிறது. உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம் செய்யுங்கள். இதற்கு பல இலவச ஆப்ஸ்கள் உள்ளன. அதன் உதவியுடன் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம். 

திறமையை டெவலப் பண்ணுங்க! 

பிடித்த உணவை ரசித்து உண்ண நேரமில்லாமல் வேலை, உறக்கம் என ஓடும் காலத்தில் புத்தாண்டில் ஒரு புதிய திறமையைக் கற்றுக் கொள்ள முடிவு செய்யுங்கள். கிட்டார் அல்லது வேறு ஏதேனும் இசைக்கருவியை வாசிக்க கற்கலாம். ஓவியம் வரைவது உள்ளிட்ட ஏதேனும் திறமையை வளர்த்து புத்தாண்டை மகிழ்வாக கொண்டாடுங்கள். 

இதையும் படிங்க; பட்ஜெட் ஷாப்பிங் ஸ்டைலிஷ் லுக்.. தெரிஞ்சுக்க வேண்டிய டெனிம் டிரெஸ் காம்பினேஷன்!

Latest Videos

click me!