மணக்க மணக்க கிராமத்து ஸ்டைல் கருவாட்டுக் குழம்பு இப்படி செய்து பாருங்க!

Published : Jun 26, 2026, 04:06 PM IST

கிராமத்து சமையல் என்றாலே அசைவமும், அதில் மிக முக்கியமாக கருவாட்டு குழம்பும் தான் நினைவுக்கு வரும். பலரின் ஃபேவரைட்டான இந்த உணவை, அதே கிராமத்து கைமணத்துடனும் சுவையுடனும் வீட்டிலேயே எப்படி எளிதாக சமைப்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

PREV
17
மண்பானை சமையல் :

கிராமத்து சுவையின் ரகசியமே மண்பானையில் பாரம்பரிய முறையில் சமைப்பது தான். கருவாட்டு குழம்பு, மீன் குழம்பு ஆகியவற்றை மண் சட்டியில் சமைத்தால் அதன் சுவை கூடுதலாக இருக்கும். குழம்பு செய்வதற்கு முன் மண் பானையை நன்றாகச் சூடாக்கி, நல்லெண்ணெய் சேர்த்து சமைத்தால் அதன் வாசனை பலமடங்கு அதிகரிக்கும்.

27
கருவாட்டை சுத்தம் செய்யும் பக்குவம் :

கருவாட்டை சமைப்பதற்கு முன் 10 நிமிடங்கள் வெது வெதுப்பான சுடுதண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இது உப்பின் அளவைக் குறைப்பதோடு, அதில் உள்ள தூசிகளையும் நீக்கி மென்மையாக்கும்.

37
பாரம்பரிய வறுத்து அரைத்த மசாலா :

தயாராக இருக்கும் மசாலா தூள்களைத் தவிர்த்து, சின்ன வெங்காயம், சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் மற்றும் மல்லியை எண்ணெயில் வதக்கி, அம்மியில் அல்லது மிக்சியில் அரைத்துச் சேர்த்தால் குழம்பு கெட்டியாகவும் சுவையாகவும் மாறும். ஒருவேளை காரம் குறைவாக இருந்தால் மிளகாய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

47
நாட்டு காய்கறிகளின் சேர்க்கை :

கருவாட்டுக் குழம்பிற்கு கூடுதல் சுவை தருவது காய்கறிகள் தான். குறிப்பாக கத்தரிக்காய், முருங்கைக்காய் மற்றும் மொச்சை பயறு ஆகியவற்றைச் சேர்க்கும் போது குழம்பின் பாரம்பரிய சுவை முழுமையடையும்.

57
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு :

இளம் சிவப்பு நிற சின்ன வெங்காயத்தையும், தோலுரித்த நாட்டுப் பூண்டையும் தாராளமாகச் சேர்க்க வேண்டும். இவற்றை எண்ணெயில் பொன்னிறமாக வதக்குவது குழம்பிற்குத் தனித்துவமான கார சுவையையும், மணத்தையும் தரும்.

67
புளிக்கரைசல் அளவு :

புளியின் புளிப்புத்தன்மை கருவாட்டின் காரத்திற்கு ஏற்ப சமமாக இருக்க வேண்டும். பழைய புளியைப் பயன்படுத்தினால் குழம்பு நல்ல நிறத்துடனும், தூக்கலான சுவையுடனும் அமையும்.

77
சுவையை கூட்டும் நல்லெண்ணெய் :

குழம்பு கொதித்து இறக்கும் தருவாயில், மேலே ஒரு ஸ்பூன் பச்சையான நல்லெண்ணெய் மற்றும் கறிவேப்பிலை தூவி மூடி வைத்தால், கிராமத்து கருவாட்டுக் குழம்பு எவ்வளவு சாப்பிட்டாலும் ஆசையும் அடங்காது, உள்ளே போகும் சாப்பிட்டிற்கு அளவும் தெரியாது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories