Top Unique Places to Visit in Chennai : சென்னையில் சுற்றிப் பார்ப்பதற்கு அழகான, அதே சமயம் அமைதியான பல இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு படகு இல்லம் காயல் பகுதியில் படகு சவாரி செய்ய ஏற்ற இடமாகும். இங்கு மோட்டார் படகு, பெடல் போட் மற்றும் துடுப்பு படகுகள் என பல தேர்வுகள் உள்ளன. குடும்பம் அல்லது நண்பர்களுடன் அமைதியாகவும், ஜாலியாகவும் பொழுதை கழிக்க விரும்புபவர்களுக்கு முட்டுக்காடு படகு இல்லம் ஏற்ற இடமாகும்.
210
தட்சிணசித்ரா
தென்னிந்தியாவின் கலை, பண்பாடு மற்றும் கட்டிடக்கலையை ஒருங்கே காட்டும் ஒரு வாழும் அருங்காட்சியமாக தட்சிணசித்ரா விளங்கி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பாரம்பரிய வீடுகள் இங்கே தத்ரூபமாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புற கலைகளை இங்கு கண்டுகளிக்க முடியும்.
310
கோவளம் கடற்கரை
கோவளம் கடற்கரை சென்னைக்கு அருகில் அமைந்துள்ள தூய்மையான கடற்கரைகளில் ஒன்றாகும். இது நீச்சல், நீர் விளையாட்டுகள், மீன் பிடித்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ஏற்ற இடமாகும். உலகத்தரம் வாய்ந்த தூய்மையான கடற்கரைகளுக்கான நீல கொடி சான்றிதழை பெற்றுள்ளது. கோவளம் கடற்கரையில் அமைந்துள்ள மீன் உணவகங்கள் மிகவும் பிரபலம்.
சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முதலை காப்பகம், ஒரு வன காப்பு மையமாகும். இங்கு வனவியல் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. ஊர்வன வகை உயிரினங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய இடம். ஆயிரக்கணக்கான முதலைகள், ஆமைகள், பாம்புகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன.
510
நெட்டுக்குப்பம் கடற்கரை
நெருக்கமான நகரச் சூழலில் இருந்து விலகி, அமைதியான சூழலில் மனதை மயக்கும் ஒரு கடற்கரையாகும். இங்கு ஒரு கான்கிரீட் தூண் கடற்கரையிலிருந்து கடலுக்குள் நீண்டுள்ளது. இது மக்களால் ‘உடைந்த பாலம்’ என்று அழைக்கப்படுகிறது. புகைப்படங்கள் எடுக்க இது ஏற்ற இடமாக உள்ளது.
610
MGM Dizzi World
சென்னையின் பழமையான மற்றும் புகழ்பெற்ற பொழுது போக்கு பூங்காக்களில் ஒன்று எம்ஜிஎம் டிசி வேல்டு. குழந்தைகள், பெரியவர்கள் என பலருக்கும் ஏற்ற சாகச விளையாட்டுக்கள் மற்றும் நீர் விளையாட்டுகள் இங்கு உள்ளன. கோடை காலத்தில் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாகும்.
710
ஆலம்பரை கோட்டை
இந்தக் கோட்டை கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு சிதிலமடைந்த வரலாற்று சின்னமாகும். மாமல்லபுரத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. முகலாயர் காலத்து கோட்டையின் எஞ்சிய பகுதிகள் கடலோரத்தில் அழகாக காட்சியளிக்கும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில் சினிமா படப்பிடிப்புக் காட்சிகள் அடிக்கடி நடக்கும்.
810
சத்ராஸ் டச்சு கோட்டை
கல்பாக்கம் அருகே அமைந்துள்ள இந்த கோட்டை டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. பழமையான கல்வெட்டுகள், தானியக்கடங்குகள் மற்றும் கல்லறைகள் இங்கு உள்ளன. இரைச்சலில் இருந்து விலகி தனிமையில் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
910
திருப்போரூர் மற்றும் திரிசூலம் மலைகள்
திருப்போரூர் மலை மீது புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. மழையை சுற்றி அமைதியான சூழல் நிலவுவதால் இந்த கோவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும். விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள திரிசூலம் மலையிலிருந்து விமானங்கள் ஏறுவதையும் இறங்குவதையும் பார்ப்பது ஒரு தனி அனுபவம். ட்ரெக்கிங் செய்ய இந்த இடம் ஏற்றது.
1010
ECR Cafe's
ஈசிஆர் சாலையில் நிறைய தீம்களுடன் Cafe-க்கள் உள்ளன. இங்கு அமர்ந்து கொண்டு கடலை ரசிப்பது மற்றும் காபியுடன் ஓய்வெடுக்க மிகச்சிறந்த இடங்களாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.