Extramarital Affair Cities : தமிழ்நாட்டில் ரொம்ப மோசமான ஊர் இதுதான்.. கள்ளக்காதலில் முதலிடம்! அடச்சே!!

Published : Aug 02, 2025, 03:53 PM ISTUpdated : Aug 02, 2025, 04:00 PM IST

இந்தியாவில் கள்ளக்காதல் அதிகமாக உள்ள நகரங்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

PREV
16
Extramarital Affair Cities in India

எல்லா நாடுகளிலும் திருமணத்தின் மீறிய உறவு சர்வசாதாரணமாகி வருகிறது. ஒழுக்கம், அறம் சார்ந்த மக்களின் பார்வை மங்கி வருகிறது. துரோகம் செய்வது எல்லா உறவுகளிலும் இயல்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கள்ளக்காதல் விவகாரங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து இந்தியாவில் ஆஷ்லே மேடிசன் வெளியிட்ட தகவல்களின்படி, தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நகரம் தான் முன்னணியில் உள்ளது. இது குறித்து இங்கு காணலாம்.

26
காஞ்சிபுரம்

சங்க காலங்களில் கல்விக்கும், கோயில்களுக்கும் புகழ்பெற்ற காஞ்சிபுரம் இன்றைய காலத்தில் கள்ளக்காதலில் முதலிடம் பிடித்துள்ளது அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம். இந்தாண்டு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் திருமணத்தை மீறிய உறவுகளைப் பதிவு செய்தது இந்த மாவட்டம் தான். ஆஷ்லே மேடிசன் கடந்தாண்டில் வெளியிட்ட தகவல்களில் காஞ்சிபுரம் 17 வது இடம். ஒரேயாண்டில் முதலாவது இடத்தை பிடித்ததுள்ளது அதிர்ச்சியான விஷயமே.

36
மத்திய டெல்லி

திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவர்கள் இருக்கும் நகரத்தில் மத்திய டெல்லி இரண்டாமிடம். நம் நாட்டின் தலைநகரின் மையப்பகுதியான மத்திய டெல்லி பணக்கார குடும்பங்களையும், மிகப்பெரிய உத்யோகத்தில் உள்ளவர்களையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

46
பெங்களூரு

பெங்களூரு பல தர மக்களை கொண்ட பிசியான நகரம். நம் நாட்டின் தொழில்நுட்ப நகரமாகவும் உள்ளது. இங்கு பல்வேறு மாநில இளைஞர்கள் பணி செய்துவருகின்றனர். நகரமயமாதல், தனிமை உள்ளிட்ட பல காரணங்கள் திருமணத்தை மீறிய உறவுக்கு காரணமாக இருக்கலாம்.

56
புனே

இந்த நகரத்தை பொறுத்தவரை மக்கள் தொகையில் அதிகளவு மாணவர்களே ஆவர். ஐடி ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் என பல தரப்பினர் இங்கு வசிக்கின்றனர். இங்குள்ள மேற்கத்திய வாழ்க்கை முறை தாக்கம், சுதந்திரம், இரவு வாழ்க்கை போன்றவை திருமணத்தை மீறிய உறவுகள் ஏற்பட காரணிகளாக இருக்கலாம்.

66
டேராடூன்

இந்த அமைதியா மலை நகரமும் கள்ளக்காதலுக்கு விதிவிலக்கல்ல. அதிகரித்த நகரமயமாக்கல், பொருளாதார சுதந்திரம் திருமணத்தை மீறிய உறவுகளுக்கு காரணமாக இருக்கலாம்.

திருமணத்தை மீறிய உறவுகள் அனைத்து இடங்களிலும் இருக்கிறது. உண்மையில் தனிநபர் ஒழுக்கம் தான் இந்த சீர்கேட்டை ஒழிக்க அடிப்படையாக இருக்க முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories