- Home
- Gallery
- Cheating Zodiac Signs : நீங்க லவ் பண்ண போறீங்களா..? இந்த 4 ராசிக்காரங்கள மட்டும் பண்ணாதீங்க.. ஜாக்கிரதை..!
Cheating Zodiac Signs : நீங்க லவ் பண்ண போறீங்களா..? இந்த 4 ராசிக்காரங்கள மட்டும் பண்ணாதீங்க.. ஜாக்கிரதை..!
Love and Cheating Zodiac Signs : ஜோதிடத்தின் படி, நீங்கள் ஒருவரை காதலிக்க போகிறீர்கள் என்றால் இந்த நான்கு ராசிக்காரர்களை மட்டும் காதலிக்காதீர்கள். அவர்கள் ஏமாற்றும் குணம் கொண்டவர்கள்.

நீங்கள் ஒருவரை காதலிக்கும் முன், நீங்கள் காதலிக்கும் நபரை பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில், ஜோதிடத்தின் படி, 4 ராசிக்காரர்கள் காதலிப்பவர்களை ஏமாற்றும் குணம் உடையவர்கள். எனவே, காதல் விஷயத்தில் அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது. அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்: இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரணத்திற்காக சாதிக்க வேண்டும் என்று குறிக்கோளை கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் அதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். மேஷ ராசிக்காரர்கள் காதல் விஷயத்தில் மிகவும் வேகமாக இருக்கலாம்.ஆனால், இந்த வேகம் சில சமயங்களில் விரிவான முறிவுக்கு வழிவகைக்கும் என்று ஜோதிடம் சொல்லுகின்றது.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். ஒருவருக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு செய்வது சில நேரங்களில் சற்று தேவையற்றது என்று இவர்கள் கருதுவார்கள். இந்த காரணத்திற்காக இவர்கள் தங்கள் உறவில் இருந்து சீக்கிரமே வெளியேறுகிறார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் காதலிக்க ஆரம்பித்த உடனேயே சலித்து போவார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.
இதையும் படிங்க: Rasi Palan : நீங்கள் கல்யாணம் பண்ணா இந்த 3 ராசிக்காரங்கள மட்டும் பண்ணாதீங்க.. விவாகரத்து கன்பார்ம்..!
விருச்சிகம்: இது ராசிக்காரர்கள் மிகவும் மர்மமானவர்கள் மற்றும் மற்றவர்களின் ஈர்க்கும் குணம் இவர்களிடம் உண்டு. விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை துணையே மகிழ்ச்சியாக வைக்க விரும்புகிறார்கள். ஆனால், சந்தேகம் வந்தால் அதை சிறிது கூட ஆராயாமல் உடனே உறவை முறித்துக்கொள்ள தயங்க மாட்டார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.
இதையும் படிங்க: Rasi Palan : பொய் சொல்வதில் இந்த 3 ராசிக்கு கைவந்த கலை..இவங்கள அடிச்சிக்க யாருமே இல்ல.. யார் யார் தெரியுமா..?
மீனம்: காதல் என்று வரும்போது மீன ராசிக்காரர்கள் தங்கள் துணியிடமிருந்து ஆழமான உணர்ச்சி ரீதியான தொடர்புக்காக ஏங்குகிறார்கள். கற்பனை உலகில் காதலை கனவு காண்கிறார்கள். நிஜ வாழ்க்கையிலும் அப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை என்றால் ஏமாற்றத்தால் உறவே முடித்துக் கொள்கிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D