உணவு என்பது நம் வாழ்வின் அடிப்படைத் தேவை, ஆனால் உணவு பிரியர்கள் அது அவர்களுக்கு வாழ்க்கை. உணவை விரும்பி சாப்பிடும் சில உணவுப்பிரியர்கள் உணவின் மீதான காதலுக்காக நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? தெரு உணவுகளை ஆராய்வது முதல் சிறந்த உணவு அனுபவத்தைப் பெறுவது வரை, உணவுப் பிரியர்கள் புதுப்புது உணவுகளை ருசிப்பதை ஒருபோதும் வேண்டாம் என்று சொல்வதில்லை.
இதற்காக எவ்வளவு விலையையும் கொடுக்கவும் தயாராக உள்ளனர். அப்படி பெரும்பணக்காரர்களாக இருக்கும் உணவுப்பிரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உலகின் டாப் 10 விலை உயர்ந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாலாடைக்கட்டி, எப்போதும் மிகவும் விலையுயர்ந்த பால் பொருளாக இருந்து வருகிறது, ஆனால் மூஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகை மானின் பாலில் தயாரிக்கப்படும் மூஸ் சீஸ், உலகின் விலையுயர்ந்த சீஸ் ஆகும். மூஸ் சீஸ் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது. ஸ்வீடனில் மட்டுமே கிடைக்கும் இந்த மூஸ் சீஸின் விலை சுமார் 1,000 டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 90,000 ஆகும். மூஸ் பால் கறப்பது எளிதான காரியம் அல்ல, இது சீஸ் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இரண்டு சகோதரிகளால் நடத்தப்படும் எல்க் ஹவுஸ் பண்ணை இந்த பாலாடைக்கட்டியின் மிகப்பெரிய மற்றும் முக்கிய உற்பத்தியாளர் என்று நம்பப்படுகிறது.
ஒயிட் ட்ரஃபுல்ஸ் :
ஒயிட் ட்ரஃபுல்ஸ் என்பது ஒரு நிலத்தடி பூஞ்சை ஆகும். ஐரோப்பாவில் பொருத்தமான காலநிலை காரணமாக வளர்க்கப்படுகின்றன. இந்த உணவு பண்டங்கள் வளர மிகவும் குறிப்பிட்ட சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகள் தேவைப்படுகின்றன, இதனால் மற்ற வகை காளான்களை விட இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இந்த ஒயிட் ட்ரஃபுல்ஸை வாங்குவதற்கு ரூ.1,000 டாலர் வரை செலவாகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.90,000 ஆகும்.
அயம் செமனி கருப்பு கோழி
கோழிக்கறி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் இந்தோனேசியாவில் வளரும் அயம் செமனி கருப்பு கோழி உலகின் விலை உயர்ந்த உணவுகளில் ஒன்றாகும். இந்தோனேசியாவில் இருக்கும் இந்த இனக் கோழிக்கறியை வாங்கினால் ரூ. 200 டாலர்களுக்கு மேல் செலவாகும்.
ஆனால் நாட்டிற்கு வெளியே, இது ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் பயம் காரணமாக அயம் செமானி கருப்பு கோழி ஏற்றுமதி செய்வது அரிது. அதன் நிறத்தைத் தவிர, இந்த இனம் பிரபலமான விளையாட்டுக் கோழியாகவும் பிரபலமானது.
Jamón Ibérico
Jamón Ibérico அல்லது Dry-Cured Iberian Ham என்பது உலகில் கிடைக்கும் பன்றி இறைச்சிகளில் மிகவும் விலை உயர்ந்ததாகும். ஐபீரியன் என்பது ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் மட்டுமே காணப்படும் ஒரு அரிய வகை பன்றி இனமாகும். Iberco பன்றிகளுக்கு கருவேல மரத்தின் பழங்கள் கொடுக்கப்பட வேண்டும், இது மிகவும் விலை உயர்ந்தது, எனவே இந்த பன்றி கறியை வாங்க சுமார் 4,500 டாலர் செலவாகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3, 76,000
Jammu and Kashmir
குங்குமப்பூ என்பது, இந்தியர்கள் அனைவரும் பண்டிகை சமயங்களில் பயன்படுத்தும் முக்கியமான பொருள், ஆனால் ஒரு கிலோ குங்குமப்பூவை சேகரிக்க, ஒருவர் 3,00,000 பூக்களை சேகரிக்க வேண்டும். குங்குமப்பூவை சேகரிக்கும் முழு செயல்முறையும் மிகவும் கடினமானது, ஏனெனில் அது ஆண்டு முழுவதும் ஒரு வாரத்திற்கு மட்டுமே வளரும், இது ஒரு கிலோவிற்கு $400 முதல் $1000 வரை செலவாகும். இந்திய மதிப்பில் சுமார் 90,000 ஆகும்.
கோபி லுவாக்
கோபி லுவாக், உலகின் மிக விலையுயர்ந்த காபி பீன்ஸ் ஆகும். இது, ஆசிய பாம் சிவெட் என்ற பூனைகளுக்கு வழங்கப்பட்டு, அதன் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் உள்ள விவசாயிகள், இந்த உலகப் புகழ்பெற்ற காபி பீன்ஸ் தயாரிக்க ஆயிரக்கணக்கான சிவெட் எச்சங்களை சேகரிக்கின்றனர். இது விலங்கின் வயிற்றில் புளிக்கவைக்கப்படுவதால், அதன் சுவைகளில் அது மிகவும் செழுமையாக இருக்குமாம்., இதன் விலை ஒரு கிலோவிற்கு சுமார் $700 ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 60,000 ஆகும்.
மாட்சுடேக் காளான்கள்
ஜப்பானில் காணப்படும் இந்த காளான்கள் அதன் தனித்துவமான இனிப்பு மற்றும் காரமான சுவைக்கு பிரபலமானது. இந்த வகையான காளான்களை வளர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏனெனில் அவை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. இந்த காளான்களின் விலை ஒரு கிலோவிற்கு $600 வரை விற்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 50,000 அகும்.
டென்சுக் தர்பூசணி அல்லது கருப்பு தர்பூசணி மிகவும் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றாகும். ஜப்பானில் விளையும் இந்த பழங்கள் வெளிப்படையாக விற்கப்படுவதில்லை, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுகின்றன. ஜப்பானிய மரபுகளின்படி, கருப்பு தர்பூசணி விலைமதிப்பற்ற திருமண பரிசாக கருதப்படுகிறது. வளர அதிக இடவசதி இருப்பதால், டென்சுக் தர்பூசணி 1,00,000 மட்டுமே வளர்க்கப்படுகிறது, ஒவ்வொரு தர்பூசணி $6,000 வரை செலவாகும். கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம் ஆகும்.
ஸ்வாலோ நெஸ்ட் சூப்கள் சீன உணவு கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், ஆனால் பணக்கார மக்களால் மட்டுமே இதை வாங்க முடியும். பறவையின் உமிழ்நீரால் இந்த வகை சூப் உருவாக்கப்படுகின்றன.. பறவைகள் தங்கள் கூடுகளை வெகு தொலைவில் உள்ள பாறைகளில் உருவாக்குகின்றன, இதனால் சேகரிக்க கடினமாக உள்ளது. எனவே இது ஒரு கிலோவிற்கு 3000 டாலர் செலவாகும். இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை லட்சமாகும்.
விலை உயர்ந்த உணவுப் பொருட்களில் கேவியர் என்ற ஒரு வகை மீனும் உள்ளது.. இந்த மீன் முட்டைகளை ருசிக்க மக்கள் ஆர்வாக இருக்கின்றனர். வெள்ளை முத்து அல்பினோ கேவியர் மிகவும் விலையுயர்ந்த வகையாக நம்பப்படுகிறது. இந்த வெள்ளை முத்துக்கள் உண்மையானவற்றை விட விலை அதிகம் மற்றும் ஒரு கிலோவிற்கு 9,100 டாலர் வரை செலவாகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் ஆகும்.