மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி.. காபியை மிதமான அளவில் குடித்தால் நிறைய நன்மைகளை பெறமுடியும். காபியை மிதமான அளவில் குடிப்பதன் மூலம் சில வகையான கேன்சர்கள் வர வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது.
அதே போல் நமது மனநிலை மேம்படுவது முதல் பார்கின்சன்ஸ், அல்சைமர்ஸ் நோய்கள் வர வாய்ப்பு குறைவது வரை பல நன்மைகள் காபி குடிப்பதால் கிடைக்கிறது. காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது. இது உடலில் இருக்கும் நச்சுகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
காபியால நன்மைகள் இருப்பதால் அதை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ அல்லது சர்க்கரையை அதிகமாக சேர்த்து கிடித்தாலும், அல்லது க்ரீம் மாதிரி உடல்நலையை கெடுக்கும் பொருட்களை கலந்து குடிச்சாலும் நீங்க நிறைய உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
முக்கியமாக காபியை இப்படி குடிப்பதால் தூக்கமின்மை, செரிமானப் பிரச்சனைகள், எடை அதிகரிப்பு மாதிரி நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் சர்க்கரை இல்லாத காபியைக் குடிப்பதால் நம்ம உடல் ஆரோக்கியத்திற்கு நம்ம உடல்நலத்துக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.