இந்தியாவின் டாப் 10 நீளமான நதிகள்; லிஸ்டில் காவிரி எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?

First Published Sep 13, 2024, 8:57 AM IST

Top 10 Longest Rivers In India : பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்ட இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன, இவை வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும், விவசாயத்தை வளர்ப்பதற்கும் மற்றும் நாகரிகங்களை வளர்ப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

India's Longest Rivers

பல்வேறு நிலப்பரப்புகளைக் கொண்ட இந்தியாவில் மிகப்பெரிய ஆறுகள் இருக்கின்றன. இந்த ஆறுகள் பெரும் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும், விவசாயத்தை வளர்ப்பதற்கும் மற்றும் நாகரிகங்களை வளர்ப்பதற்கும் இந்த ஆறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தியாவின் பரந்த நிலப்பரப்பில் 200 க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்கின்றன. பெரும்பாலான இந்திய நதிகள் ஆரவல்லி, காரகோரம் மற்றும் இமயமலையில் இருந்து உற்பத்தியாகின்றன. இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் கருதப்படும் நிலையில், விவசாயம் ஆறுகள் நீர்ப்பாசன அமைப்புகளின் உயிர்நாடியாக திகழ்கின்றன.

மேலும் இந்த நதிகள் நாட்டின் புவியியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரி, இந்தியாவின் டாப் 10 நீளமான ஆறுகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

India's Longest Rivers

கங்கை:

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையிலிருந்து உருவாகும் கங்கை இந்தியாவின் மிக நீளமான நதியாகும். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து வங்காள விரிகுடாவில் சென்று கலக்கிறது.. கங்கை நதியின் நீளம் தோராயமாக 2,525 கிலோமீட்டர்கள். இது பங்களாதேஷில் பத்மா நதி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை இந்தியாவின் மிகவும் புனிதமான நதியாக கருதப்படுகிறது.

 கோதாவரி:

கங்கைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய நதியாக கோதாவரி உள்ளது. இந்த ஆற்றின் நீளம் சுமார் 1,465 கி.மீ ஆகும். மகாராஷ்டிராவில் உள்ள திரிம்பாக் மலையில் உருவாகி மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த நதி ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த நதி லட்சக்கணக்கான மக்களின் உயிர்நாடியாக செயல்படுகிறது. கோதாவரி ப்ரவரா, மஞ்சிரா, பெங்கங்கா, வார்தா, இந்திராவதி, சபரி உள்ளிட்ட துணை நதிகளும் உள்ளன.

அது என்ன ஸ்லீப் டூரிசம்? இதில் இவ்வளவு நன்மைகளா? டாப் 5 இடங்கள் இதோ!

Latest Videos


India's Longest Rivers

கிருஷ்ணா:

இந்தியாவின் மூன்றாவது பெரிய நதியாக கிருஷ்ணா நதி திகழ்கிறது. மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகும் இந்த கிருஷ்ணா நதியின் நீளம் சுமார் 1,400 கி.மீ ஆகும். இந்த நதி மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. துங்கபத்ரா, பீமா, கட்டபிரபா, மலபிரபா மற்றும் மூசி உள்ளிட்ட பல ஆறுகள் கிருஷ்ணா நதியின் துணை நதிகளாகும். கர்நாடகாவில் உற்பத்தியாகும் துங்கபத்ரா நதி கிருஷ்ணா நதியின் மிகப்பெரிய துணை நதிகளில் ஒன்றாகும்.

யமுனா:

சுமார் 1376 கி.மீ நீளம் கொண்ட யமுனா நதி இந்தியாவின் நான்காவது பெரிய நதியாகும். இந்த நதி உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள யமுனோத்ரி பனிப்பாறைகளில் இருந்து உருவாகிறது. கங்கையின் துணை நதியான இது இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் வழியாக பாய்ந்து உ.பி.யின் பிரயாக்ராஜ் கங்கை நதியில் கலக்கிறது. பிரயாக்ராஜ் கங்கை-யமுனை சங்கமத்தின் காரணமாக சனகம் நாக்ரி என்று அழைக்கப்படுகிறது.

India's Longest Rivers

நர்மதா:

இந்தியாவின் ஐந்தாவது பெரிய நதியாக நர்மதா நரி உள்ளது. இது தோராயமாக 1,312 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்கிறது. நர்மதா நதி மத்திய இந்தியாவில் ஒரு முக்கிய நதி. மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்கண்டக் பீடபூமியில் இருந்து உருவாகும் இந்த நதி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் வழியாக மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. 

தவா, பர்னா, ஷக்கர் மற்றும் ஹிரன் ஆறுகள் நர்மதா நதியின் முக்கிய துணை நதிகள். நீர்ப்பாசனம், நீர் மின் உற்பத்தி மற்றும் நீர் விநியோகத்திற்காக இந்த ஆற்றில் பல அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. நாட்டின் பிரபலமான சர்தார் சரோவர் அணையும் குஜராத்தில் இந்த நதியில் அமைந்துள்ளது.

ரயில் டிக்கெட்டின் H1, H2: முன்பதிவு செய்யப்பட்ட உங்கள் இருக்கையை ஈசியா கண்டுபிடிக்க இதை பாலோ பண்ணுங்க

சிந்து:

இந்தியாவின் 7-வது பெரிய நதியாக சிந்து நதி இருக்கிறது. திபெத்திய பீடபூமியில் உள்ள மானசரோவர் ஏரியிலிருந்து உருவாகும் இந்த நதி லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் வழியாக பாய்ந்து பாகிஸ்தானை அடைந்து இறுதியில் அரபிக்கடலில் கலக்கிறது. சிந்து நதியின் மொத்த நீளம் 3,180 கிலோமீட்டர்கள்.

பிரம்மபுத்திரா:

நாட்டின் ஏழாவது பெரிய நதியான பிரம்மபுத்திரா நதி, இமயமலையில் கைலாஷ் மலைக்கு அருகிலுள்ள செமாயுங்டுங் பனிப்பாறையிலிருந்து உருவாகிறது. இப்பகுதி சீனாவில் உள்ளது. பிரம்மபுத்திரா நதியின் மொத்த நீளம் தோராயமாக 2,900 கிலோமீட்டர்கள் ஆனால் இந்த நதியின் 918 கிலோமீட்டர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது.

பிரம்மபுத்திரா அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. அம்மாநிலத்தில் அது சியாங் நதி என்று அழைக்கப்படுகிறது. இது கங்கை மற்றும் மேக்னா நதிகளுடன் ஒன்றிணைந்து வங்காள விரிகுடாவில் விழுவதற்கு முன் உலகின் மிகப்பெரிய டெல்டாவான சுந்தரவன டெல்டாவை உருவாக்குகிறது.

India's Longest Rivers

மகாநதி:

858 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் 8-வது பெரிய நதியாகும். சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் உருவாகும் இந்த ஆறு கிழக்கு திசையில் பாய்கிறது. சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. சியோநாத், ஜோங்க், ஹஸ்டியோ, ஓங் மற்றும் டெல் ஆகியவை மகாநதியின் முக்கிய துணை நதிகள் ஆகும். சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் விவசாய உற்பத்திக்கு பங்களிக்கும் ஆற்றின் நீர் பாசனத்திற்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

காவேரி:

இந்தியாவின் 9-வத்ய் பெரிய நதியாக காவிரி உள்ளது. இது கர்நாடகாவின் குடகு மலையில் உருவாகிறது. காவிரி ஆறு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாக கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இது மொத்தமாக சுமார் 800 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. ஹேமாவதி, கபினி, அர்காவதி, ஷிம்ஷா மற்றும் அமராவதி உள்ளிட்ட ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகள் ஆகும்.

தபதி:

தபதி நதி இந்தியாவின் பத்தாவது பெரிய நதியாகும். மத்திய பிரதேசத்தில் உள்ள சத்புரா மலைத்தொடரில் இருந்து உருவாகும் இந்த நதியின் மொத்த நீளம் சுமார் 724 கிலோமீட்டர் ஆகும். இந்த ஆறு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் வழியாக கடந்து அரேபியக் கடலுக்குள் இருக்கும் கம்பாட் வளைகுடாவில் கலக்கிறது.

click me!