சரி உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ளும் முன், 40 வயதை கடந்த ஆண்கள் எந்தெந்த விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்பதை இப்பொது பார்க்கலாம். இளம் வயது ஆண்களில் இப்பொது அதிகமாக இருப்பது இருதயம் சம்மந்தமான நோய்கள் தான். குறிப்பாக 35 முதல் 40 வயதிலேயே மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆகையால் 40 வயதை கடந்த ஆண்கள் முதலில் தங்கள் இதயம் சமந்தா விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது.
பொதுவாக மாரடைப்பின் அறிகுறிகள் என்று சில விஷயங்களை கூறுவார்கள், அதாவது நெஞ்சு எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம், தலைசுற்றல், இதயத்தின் நடுப்பகுதியில் வலி அல்லது கடுமையான எரிச்சல், தலைசுற்றல் போன்ற விஷயங்கள் இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறிகளான இருக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி, ஆண்களுக்கு காலில் ஏற்படும் சில அசௌகரியங்கள் கூட இதய நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்கள்.