உலகின் டாப் 10 மகிழ்ச்சியான நாடுகள் இவை தான்! இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

First Published | Oct 26, 2024, 11:30 AM IST

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று விரிவாக பார்க்கலாம். 

Happiest Countries in the world

மன அழுத்தம் என்பது ஒரு பொதுவான விஷயமாகிவிட்ட இந்த உலகில், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் அமைதி, சமநிலை மற்றும் நிறைவைக் காண மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றனர். ஆனால் உண்மையிலேயே அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

சமீபத்திய தரவுகளின்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல். பலமான சமூக அமைப்புகளுக்கும், தரமான சுகாதாரத்திற்கான அணுகலுக்கும், வேலை-வாழ்க்கை சமநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் பெயர் பெற்ற பெரும்பாலான உயர்மட்ட நாடுகள் ஐரோப்பிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணிகள் அவர்களின் உயர் மட்ட மகிழ்ச்சிக்கு பங்களிக்கின்றன. எனவே, உலகின் மிகவும் மகிழ்ச்சியான 10 நாடுகள் பற்றி குறித்து தற்போது பார்க்கலாம்.

Happiest Countries in the world

பின்லாந்து: 

உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின்  மகிழ்ச்சி மதிப்பெண் 7.74 ஆகும். பின்லாந்தின் இயற்கை அழகு, வலுவான சமூக ஆதரவு அமைப்புகள், குறைந்த ஊழல் மற்றும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றுடன் உயர்தர வாழ்க்கையை வழங்குகிறது. 

டென்மார்க்: 7.58

டென்மார்க் 7.58 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இலவச மருத்துவம், மானியத்துடன் கூடிய குழந்தைப் பராமரிப்பு, கல்விக் கட்டணமில்லாத பல்கலைக்கழகங்கள் மற்றும் தாராளமான ஓய்வூதியம் உள்ளிட்ட சமத்துவம் மற்றும் சமூக நலன் மீதான நாட்டின் முக்கியத்துவம், உயர் மட்ட வாழ்க்கை திருப்திக்கு பங்களிக்கிறது. 

பூமியில் உள்ள சொர்க்கவாசல்.. 5000 அடி உயரம்.. 999 படிகள்! புதையல் மலை எங்கே இருக்கு?

Tap to resize

Happiest Countries in the world

ஐஸ்லாந்து: 

பின்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளின் பல சமூக ஆதரவு மற்றும் பொருளாதார காரணிகளை ஐஸ்லாந்தும் பின்பற்றி வருகிறது, இது அதிக அளவு மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கை திருப்தியை வழங்குகிறது. ஐஸ்லாந்தின் இயற்கை அழகு,  அதன் குடிமக்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும், இது 7.52 மதிப்பெண்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்வீடன்: 

ஸ்வீடன் 7.39 மதிப்பெண்களுடன்  மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ஸ்வீடனும் தாராளமான சமூக நலன்கள், குறைந்த ஊழல் மற்றும் நிலையான பொருளாதாரம் ஆகியவற்றை வழங்குகிறது, இது அதன் குடிமக்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது.

இஸ்ரேல்:

மத்திய கிழக்கின் மகிழ்ச்சியான நாடாக இஸ்ரேல் உள்ளது, 7.34 மதிப்பெண்களுடன் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது. இருப்பினும், சமீபத்திய போருக்கு முன்னர் இஸ்ரேலின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இது வாழ்க்கை மதிப்பீடுகள் 0.9 புள்ளிகளால் வீழ்ச்சியடையச் செய்தது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. வலுவான பொருளாதாரம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் துடிப்பான கலாச்சாரம் ஆகியவற்றால் இஸ்ரேலின் மகிழ்ச்சிக்கு பங்களிக்கிறது.

Happiest Countries in the world

நெதர்லாந்து: 

7.34 மதிப்பெண்களுடன் நெதர்லாந்து 6வது மகிழ்ச்சியான நாடு. வலுவான சமூக ஆதரவு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றுடன் அந்நாட்டு மக்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்றனர். 

நார்வே: 

7.32 மதிப்பெண்களுடன் நார்வே இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. நாவேயின் மகிழ்ச்சியானது அதன் உயர் GDP , வலுவான சமூக ஆதரவு அமைப்புகள் மற்றும் ஆரோக்கியமான ஆயுட்காலம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. நார்வே அரசாங்கம் தனது குடிமக்களுக்கு ஆதரவாக கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளில் அதிக முதலீடு செய்கிறது.

லக்சம்பர்க்: 

லக்சம்பர்க் 7.12 மதிப்பெண்களுடன் இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ஒரு சிறிய ஐரோப்பிய நாடான, லக்சம்பேர்க் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளது. அதன் குடிமக்களுக்கு நிலையான, வளமான சூழலை வழங்குகிறது. லக்சம்பர்க் அதன் பன்மொழி கலாச்சாரம் மற்றும் உயர்தர வாழ்க்கைக்கு பெயர் பெற்றது.

சுவிட்சர்லாந்து: 

சுவிட்சர்லாந்து 7.06 மதிப்பெண்களுடன் 9வது மகிழ்ச்சியான நாடு. வலுவான பொருளாதாரம், அதிக வருமானம், குறைந்த ஊழல் மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றால் தொடர்ந்து உயர்ந்த இடத்தில் உள்ளது. சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் சுவிஸ் உயர்தர வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்றனர்.

Happiest Countries in the world

ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா 7.05 மதிப்பெண்களுடன் இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஐரோப்பிய நாடு அல்லாத நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. வலுவான பொருளாதாரம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் உயர்தர வாழ்க்கை மக்களின் மகிழ்ச்சிக்கு பங்களிக்கிறது.

கணக்கெடுக்கப்பட்ட 143 நாடுகளில், இந்தியா 126 வது இடத்தைப் பிடித்துள்ளது. நமது அண்டை நாடுகளான சீனா 60 வது இடத்திலும், நேபாளம் 93 வது இடத்திலும், பாகிஸ்தான் 108 வது இடத்திலும், மியான்மர் 118 வது இடத்திலும், இலங்கை 128 வது இடத்திலும், பங்களாதேஷ் 129 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 129 வது இடத்திலும் உள்ளன. 

உலகின் 2-வது கோடீஸ்வரர் மார்க் ஜூக்கர்பெர்க்! முதலிடத்தில் யார் தெரியுமா?

Latest Videos

click me!