மிஸ் பண்ணிடாதீங்க... உலோக கழிவுகள் டூ உயிரோட்டம் உள்ள சிற்பங்கள்... சென்னையில் இன்று முதல் அனுமதி...!

First Published Feb 19, 2021, 6:16 PM IST

முழுக்க முழுக்க உலோக கழிவுகளால் ஆன கழுகு, கடற்கன்னி, ஏர் தழுவும் வீரன், படகுடன் கூடிய மீனவர், அழகிய கொம்புகளுடன் கலை மான், அதை பார்த்து பாயும் புலி என ஒவ்வொரு உருவத்தையும் மிகவும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். 

எளிதில் மக்காத கழிவுகளால் பூமிக்கு ஏற்படும் அபாயங்கள் ஏராளம். ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கே கழிவு மேலாண்மை மிகப்பெரிய சவாலாக மாறிவருகிறது. ஆனால் கழிவுகளையே கலையாக மாற்றினால் எப்படியிருக்கும்?... என மாற்றி யோசித்த சென்னை மாநகராட்சி நமக்காக ஒரு மாபெரும் விஷயத்தை செய்து முடித்துள்ளது.
undefined
கார், இருசக்கர வாகனங்கள், தொழிற்சாலை உதிரி பாக கழிவுகள் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் சேகரிப்பட்ட உலோக கழிவுகளை, ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற பகுதிகளைச் சேர்ந்த திறமையான சிற்ப கலைஞர்களின் உதவியுடன் உயிரோட்டமுள்ள சிலையாக வடிவமைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி.
undefined
முழுக்க முழுக்க உலோக கழிவுகளால் ஆன கழுகு, கடற்கன்னி, ஏர் தழுவும் வீரன், படகுடன் கூடிய மீனவர், அழகிய கொம்புகளுடன் கலை மான், அதை பார்த்து பாயும் புலி என ஒவ்வொரு உருவத்தையும் மிகவும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.
undefined
இவற்றில் குறிப்பாக பழைய இருசக்கர வாகனங்களின் ஜெயின் மற்றும் இதர பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கடற்கன்னி, 5 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ல பருந்து ஆகியன பிரம்மாண்டமாக பார்வையாளர்களின் கண்களை கவர்கிறது.
undefined
சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் இடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. திருவான்மியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
undefined
உலோக கழிவுகளில் இருந்து கலைநயத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த மெட்டல் சிலைகளை கண்டு ரசிக்க இன்றிலிருந்து இரண்டு வாரத்திற்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
undefined
இங்கு வரும் பார்வையாளர்களுக்கும் அனுமதி இலவசம் என்பதால் மிஸ் செய்யாமல் ஒருமுறை குழந்தைகளுடன் சென்று கண்டுரசித்துவிட்டு வாருங்கள்... எதிர்கால தலைமுறைகளும் அறிந்து கொள்ளட்டும் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து.
undefined
click me!