சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு... சூப் பாக்கெட்டை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

First Published | Feb 19, 2021, 3:29 PM IST

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்கள் சந்தேகத்தை கிளப்ப திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்கள் சந்தேகத்தை கிளப்ப திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல், சென்னை முகவரிகளுடன் இரண்டு பார்சல்களில் ஒன்றில் பரிசு அட்டையும், மற்றொன்றில் சூப் பாக்கெட்டும் இருந்துள்ளது. இது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
Tap to resize

இதையடுத்து சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.
மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை எனத் தெரியவந்தது. நெதர்லாந்திலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் ரூ.6.6 லட்சம் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ ரக மாத்திரைகள் மற்றும் போதை படிகங்களை சென்னை சுங்கத்துறை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!