தற்போது மழைக்காலம் ஆரம்பமாக போகிறது. மழைக்காலம் வந்தாலே கூடவே அது தொடர்பான நோய்களும் வந்துவிடும். பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளை கூட இந்நோய்கள் தாக்குகின்றது. இந்த பருவத்தில் சிறிய அலட்சியம் கூட பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். காரணம், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவர்கள் எளிதில் பாதிப்படைவார்கள்.
எனவே, இந்த மழைக்காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் பராமரிப்பதும், ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதும் அவர்களை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.இந்த கால நிலையில் குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, தொண்டை வலி போன்ற பிரச்சனைகளால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
சில சமயங்களில் இந்தோய் குழந்தைகளுக்கு பெரிய அளவில் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இதனால் தாய்மார்கள் அதிகம் சிரமத்திற்கு உள்ளாவார்கள். காரணம் அவர்களை கூடுதல் நேரம் ஒதுக்கி மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், இந்த பருவமழை காலத்தில் சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும்.