
வாழைப்பழங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை செய்யக்கூடியவை. தினமும் விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபவர்கள் வாழைப்பழங்களை எடுத்துக் கொள்வதால் அவர்களுடைய தசைகள் வலுவாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் நாள்தோறும் வாழைப்பழம் சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். வேலைக்கு செல்பவர்கள் சாப்பிட முடியாத நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். இதையெல்லாம் தவிர வாழைப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதிலும் செவ்வாழைப்பழத்தை உண்பதால் வைட்டமின் சத்துக்கள் உள்ளிட்ட எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.
செவ்வாழை சத்துக்கள்:
செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்கள், பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் செவ்வாழை உண்ணும்போது உடலின் உள்ளுறுப்புகளான நுரையீரல், குடல், இதயம் கல்லீரல் போன்றவற்றின் செயல்பாடு மேம்படுகிறது. இது மட்டுமின்றி செவ்வாழைகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் இதய நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை 10 மடங்கு அதிகப்படுத்தும் ஆற்றல் செவ்வாழைகளுக்கு உண்டு.
குடலின் செயல்பாட்டை மேம்படுத்த செவ்வாழை பயன்படுவதால், மலச்சிக்கல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருகிறது. மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக காணப்படுகிறது. இது நமது சிறுநீரகத்தை நன்றாக செயல்பட வைக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் பிரச்சனை இருப்பவர்கள், செவ்வாழை சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க முடியும். சிறுநீரக கற்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் இரண்டு தடவை செவ்வாழைப்பழத்தை உண்ணலாம்.
தன்னுள் ஏராளமான சத்துக்களை கொண்டிருக்கும் செவ்வாழையை, நாள்தோறும் 100 கிராம் உண்பவர்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஏனென்றால் இந்த வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டின் காணப்படுகிறது. இது கண் நோய்களை சரி செய்ய கூடியது. இதனால் கண்பார்வையும் கூர்மை பெறுகிறது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக செவ்வாழைப்பழத்தை உண்பவர்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்பட வாய்ப்பு குறைவு என சொல்லப்படுகிறது.
சரும பராமரிப்பு:
செவ்வாழைப்பழத்திற்கு கிருமிகளுடன் போராடும் ஆற்றல் உண்டு. இது சரும பராமரிப்பதற்கு இன்றியமையாதது. நாள்தோறும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வருவதால் சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஒரு நாளுக்கு இரண்டு செவ்வாழைப் பழங்கள் என 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் கூட நிவர்த்தி ஆகும்.
எலும்பு ஆரோக்கியம்:
நம்முடைய பற்களும் எலும்புகளும் வலுப்பெற செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவது உதவியாக இருக்கும். பற்களுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் செவ்வாழைப்பழத்தில் காணப்படுகின்றன. உங்களுக்கு ஏற்கனவே கொடூர பல் வலி, பல் அசைவு போன்ற பிரச்சனைகள் இருந்தால் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு பாருங்கள். தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழைப்பழத்தை கொண்டு வந்தால் வாய் சுகாதாரம் மேம்படும்.
இதையும் படிங்க: வாழைப்பழம் நல்லது தான்.. ஆனா வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க.. ஏன் தெரியுமா?
கண் ஆரோக்கியம்:
செவ்வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்து காணப்படுகிறது. இது இதயத்தில் உள்ள தமனிகள் தடிமனாவதை தடுக்கிறது. சில புற்றுநோய்கள் ஏற்படாமல் தற்காப்பு அளிக்கிறது. செவ்வாழைப் பழம் உண்ணும் போது நமக்கு கிடைக்கும் பீட்டா கரோட்டின் உடலுக்குள் செல்லும்போது வைட்டமின் 'ஏ' ஆக மாற்றம் பெறுகிறது. இதனால் கண்களுடைய ஆரோக்கியம் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், பீட்டா கரோட்டின் உதவுகிறது. சருமத்தை பராமரிக்க செவ்வாழைப்பழம் உண்பது அவசியம். சர்க்கரை நோயாளிகளும் செவ்வாழைப்பழத்தை அவ்வப்போது உண்ணலாம். எனினும் உங்களுடைய மருத்துவரின் ஆலோசனையின் படி செவ்வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வாழைப்பழத் தோல் உண்மையில் கரும்புள்ளிகள், முகப்பரு நீக்க உதவுமா?!
ரத்த அணுக்கள்:
செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த அணுக்களுடைய அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. மற்ற வாழைப்பழங்களை ஒப்பிடும்போது செவ்வாழையில் கலோரிகள் குறைவாக உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் நாள்தோறும் காலையில் ஒரு செவ்வாழையை உண்ணலாம். செவ்வாழைப்பழத்தில் சத்துக்கள் சரிவிகிதமாக காணப்படுவதால், இதனை உண்ணும்போது சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக இருக்க செய்யும். ஏனென்றால் இந்த வாழைப்பழம் உங்களுக்கு அதிகப்படியான ஆற்றலை வழங்குகிறது. ஏற்கனவே நரம்பு தளர்ச்சியால் பாதிப்பு உள்ளவர்கள் நாள்தோறும் செவ்வாழையை உண்பதால் நல்ல மாற்றம் ஏற்படும்.
செவ்வாழை பழங்களில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் காணப்படுகிறது. மேலும் செவ்வாழைப்பழம் உண்பதால் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 காணப்படுகிறது. இது ரத்த சிவப்பணுக்களை உருவாக்க பயன்படுகிறது. இதனால் இரும்புச் சத்து குறைபாட்டு நோய்கள் உங்களை அண்டாது. தொடர்ந்து செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.