மழை வரப்போகுது.. லெதர் ஷூக்களை பராமரிக்க சூப்பரான டிப்ஸ்!

First Published | Sep 26, 2024, 12:50 PM IST

Leather Shoe Care in Rainy Season : மழை காலத்தில் லெதர் ஷூக்களில் பூஜைகள் உருவாகாமல் அவற்றை எப்படி பராமரிப்பது எப்படி என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Leather Shoe Care in Rainy Season In Tamil

தற்போது மழை காலம் ஆரம்பமாக போகிறது. இந்த பருவமழை பசுமையாகவும், புத்துணர்ச்சியாகவும், துடிப்பாக இருந்தாலும் பூஞ்சை, இரப்பதம் மற்றும் தொற்று நோய் போன்றவை நம்மை தொந்தரவு செய்யும். குறிப்பாக வீட்டு உபயோக பொருட்கள் முதல் சமையல் அறைக்கு தேவையான பொருட்கள் வரை என அனைத்திற்கும் கூடுதல் கவனம் தேவை. ஏனெனில், கொஞ்சம் கவனம் குறைவு கூட கெட்டுவிடும். 

இருப்பினும், இந்த காலகட்டத்தில் காலணிகளை பராமரிப்பது மிகவும் சவாலானது. மழை, சேரு மற்றும் ஈரப்பதம் ஆகியவை அதிகரிப்பதால், அவைகள் நீண்ட காலம் பயன்படுத்த முடியாமல் போகும். குறிப்பாக, லெதர் பொருட்கள் மிகவும் சேதமடையும். இவற்றை முறையாக பராமரிக்கவில்லை என்றால் அவற்றில் பூஞ்சை வளர தொடங்கும்.

Leather Shoe Care in Rainy Season In Tamil

குறிப்பாக, மழை காலத்தில் லெதர் ஷீக்களை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அவை கெட்டுப் போகும். அவை ஷீ ரேக்கில் பயன்படுத்தப்படாமல் அப்படியே வைத்தாலும் அவற்றில் கறைகள் படியும் மற்றும் பூச்சிகள் உருவாகத் தொடங்கும். பூஞ்சையுடன் கூடிய கறை படிந்த தோல் காலணிகள் மோசமாக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் கால்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

இது தவிர, அவற்றின் வடிவமும் நிறமும் மோசமடையத் தொடங்கும். எனவே இந்த பதிவில் லெதர் ஷீக்களில் பூஞ்சைகள் உருவாகாமல் தடுப்பதற்கான வழிகள் மற்றும் அவற்றை பராமரிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள, இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறைகளை நீங்கள் பின்பற்றினால் மட்டும் போதும். உங்கள் விலையுயர்ந்த லெதர் ஷூக்கள் வருடக் கணக்கு ஆனாலும் புதுசு போல அப்படியே இருக்கும்.

இதையும் படிங்க:   மழை காலத்தில் பாம்புகளை விரட்ட இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் போதும்!!

Tap to resize

Leather Shoe Care in Rainy Season In Tamil

மழைக்காலத்தில் லெதர் ஷீக்களை பராமரிப்பதற்கான டிப்ஸ்:

வாட்டர் ப்ரூப் ஸ்ப்ரே :

இப்போதெல்லாம்  கடைகள் மற்றும் ஷீ க்ந்டைகளில் வாட்டர் ப்ரூப் ஸ்ப்ரே எளிதாகவே கிடைக்கிறது. இவற்றை நீங்கள் வாங்கி உங்களது ஷூக்களின் மேற்பரப்பில் தெளித்தால் போது. அவை வாட்டர் ப்ரூப் என்பதால், உங்களது விலை உயர்ந்த ஷு வில் தண்ணீர் பட்டால் கூட அவை ஒருபோதும் கெட்டுப் போகாது அப்படியே புதுசு போல இருக்கும்.

ஷூக் கவர்கள் :

நீங்கள் மழைக்காலத்தில் வெளியில் செல்லும்போது அல்லது பைக்கில் செல்லும் போது உங்களுடன் தண்ணீர் புகாத படி ஷூ கவர் எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில், மழை பெய்யும் போதெல்லாம் இதை உங்களது ஷூக்களுக்கு மேல் அணிந்தால் அவை பாதுகாப்பாக இருக்கும் சேதமடையாது.

சரியான காலணிகளை பயன்படுத்தவும் :

மழைக்காலத்தில் ரப்பர் அல்லது நீர் புகாத பொருட்களால் செய்யப்பட்ட காலணிகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் இத்தகைய காலணிகள் தண்ணீர் பட்டால் கூட சேதமடையாது. சீக்கிரமாகவே உலர்ந்து விடும்.

Leather Shoe Care in Rainy Season In Tamil

வினிகர் : 

வினிகர் சமையலறையில் மட்டுமல்ல உங்களது லெதர் ஷூக்களில் உள்ள வெள்ளைப் பூஞ்சை நீக்கவும், அவற்றை நீண்ட நாள் பயன்படுத்தவும் உதவுகிறது. இதற்கு உங்களது லெதர் ஷூவில் பூஞ்சை இருக்கும் இடத்தில் வினிகரை கொண்டு துடைத்து சுமார் 15 நிமிடம் வெயிலில் காய வைக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களது ஷூ பழைய நிலைமைக்கு வந்துவிடும். ஏனெனில், வினிகரில் லேசான அமிலம் இருப்பதால் அது உடனடியாக பூஜையை கொன்று உங்களது ஷூவை சுத்தப்படுத்துகிறது.

வாஸ்லின் :

லெதர் ஷூக்கலில் பூஞ்சை வளர்ச்சியின் காரணமாக வெள்ளை புள்ளிகள் தோன்றும். அவை எளிதில் சுத்தம் செய்வது கடினம். ஆனால் பெட்ரோலியம் ஜெல் உதவியுடன் இந்த கறைகளை மிகவும் சுலபமாக செய்துவிடலாம் தெரியுமா? இதற்கு முதலில் ஷு வில் இருக்கும் பூச்சிகளின் மீது இந்த ஜெல்லியை தடவி சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு, ஜெல்லியை பாலிஷ் செய்யவும் பின் அதன் மீது ஹேர் டிரையர் பயன்படுத்தி அதில் இருந்து சூடான காற்றை காட்டவும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் ஷூக்களின் மீது பூஞ்சையால் ஏற்பட்ட வெள்ளைப் புள்ளிகள் எளிதில் அகன்றுவிடும்.

Leather Shoe Care in Rainy Season In Tamil

சுத்தமாக வைக்கவும் :

உங்களது ஷீக்கள் ஈரமானால் அவற்றை நன்கு உலர்த்தி வீட்டிற்கு வந்தவுடன் சுத்தம் செய்யுங்கள். இதற்கு நீங்கள் செய்தித்தாள்கள் அல்லது ஏதாவது ஒரு உணர்ச்சிகள் கொண்டு ஈரமான ஷூக்களை உலர வைக்கலாம். உள்ளே ஈரப்பதம் ஆகற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 இப்படி பராமரிக்கவும் :

மழைக்காலத்தில் ஷூக்களை காற்றோட்டமான மற்றும் உயர்ந்த இடத்தில் வைத்து பராமரிக்கவும். இதன் காரணமாக அவை ஈரபதத்தில் இருந்து பாதுகாக்கப்படும். நீங்கள் ஷூ ரேகை பயன்படுத்தினால் அதை செய்தித்தாள்கள் கொண்டு மூடி வைக்கவும். மேலும் அவற்றில் ஈரமான காலணிகளை வைக்க வேண்டாம்.

மேலே சொன்ன வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்திலும் உங்களது லெதர் ஷூக்களை எந்த செய்தாரமுமின்றி புதியதாகவும் சுத்தமாகவும், வைத்திருக்க முடியும்.

இதையும் படிங்க:  மழை காலத்தில் ஏசியை இப்படி பயன்படுத்துங்க... கரெண்டு பில் மிச்சமாகும்!!

Latest Videos

click me!