சத்தான ப்ரோக்கோலி வாங்குவதற்கான சூப்பர் டிப்ஸ்!!

First Published | Sep 26, 2024, 9:20 AM IST

Broccoli For Health : ஏராளமான மருத்துவ நன்மைகள் கொண்ட ப்ரோக்கோலியை எப்படி பார்த்து வாங்க வேண்டும்? ப்ரோக்கோலியை எப்படி எளிமையாக சமைக்கலாம் என இப்பதிவில் காணலாம்.

Broccoli For Health In Tamil

ப்ரோக்கோலி (Broccoli) பார்ப்பதற்கு காலிஃப்ளவர் மாதிரியே இருக்கும். ஆனால் இதன் நிறம் பச்சை. பலரும் இதனுடைய வாசனை, விலை போன்ற காரணத்திற்காக வாங்கி சமைப்பதில்லை. உண்மையில் ப்ரோக்கோலியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. வெறும் 90 கிராம் ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ, சி, கே போன்ற சத்துக்களை முழுமையாக பெறலாம். வல்லாரை கீரையை போலவே நினைவாற்றலை அதிகப்படுத்தும். 

செலினியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவையும் இதில் கொட்டி கிடக்கின்றன.  புற்றுநோயை தடுக்க ப்ரோக்கோலியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை உண்பதால் வீக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக ப்ரோக்கோலியில் குறைந்த கலோரிகளே உள்ளன. ஆனால் பல ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் இதில் காணப்படுகிறது. மற்றும் ப்ரோக்கோலியின் நன்மைகளை இங்கு காணலாம். 

இதையும் படிங்க:  ப்ரோக்கோலி சாப்பிட்டால் உடல் எடை குறையும்னு சொல்றாங்களே அது ஏன் தெரியுமா..?

Broccoli For Health In Tamil

ப்ரோக்கோலியின் சத்துக்கள்: 

ப்ரோக்கோலியில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி ஆகிய வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், செலினியம் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிகுந்துள்ளன. 

புற்றுநோய் பாதுகாப்பு: 

ப்ரோக்கோலியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு காரணமான உயிரணு சேதத்தைத் தடுக்க உதவும். சில ஆராய்ச்சியாளர்கள், ப்ரோக்கோலி அல்லது அதிலிருந்து எடுக்கப்பட்ட சாறு புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது என்கிறார்கள். 

நோய் எதிர்ப்பு சக்தி: 
 
வைட்டமின் சி சிறந்த ஆக்ஸிஜனேற்றி. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுகிறது. புற்றுநோய், இதய நோய், கண்புரை, இரத்த சோகையை தடுக்கவும் ப்ரோக்கோலி உதவும்.  ஜலதோஷம் அறிகுறிகள் தென்படும்போது ப்ரோக்கோலி சாப்பிட்டால் அதன் வீரியம் குறையும்.  சளி தொல்லையை குறைக்கவும் உதவும்.

Latest Videos


Broccoli For Health In Tamil

எலும்பு ஆரோக்கியம்: 

எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம், கொலோஜென் ப்ரோக்கோலியில் காணப்படுகிறது. உடலில் 99 சதவீதம் கால்சியம் நம்முடைய எலும்புகள், பற்களில் தான் இருக்கிறது. கொலோஜனை உற்பத்தி செய்ய தேவைப்படும் வைட்டமின் சி கூட ப்ரோக்கோலியில் உள்ளன. மேலும் இதில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் (USDA) கூற்றின்படி, 76 கிராம் ப்ரோக்கோலியில் ஒரு நபரின் தினசரி கால்சியம் தேவையில் 3% முதல் 3.5% வரை கிடைக்கும். 

செரிமானம் மேம்படும்: 

செரிமானத்திற்கு ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. தொடர்ந்து உண்பதால்  நாள்பட்ட மலச்சிக்கல் கூட தடுக்கப்படுகிறது. செரிமானப் பாதையை மேம்படுத்தவும், பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை  குறைக்கவும் ப்ரோக்கோலி உதவும். ஒரு ஆய்வில் நார்ச்சத்து குறைவாக உண்பவர்களை விடவும்  அதிக அளவு சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

Broccoli For Health In Tamil

தோல் பராமரிப்பு: 

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி உடலில் கொலாஜனை உற்பத்தியை ஊக்குவிக்கும். இதனால்  வயதானதால் ஏற்படும் சுருக்கங்கள் குறையும். தோல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் ப்ரோக்கோலிக்கு உண்டு. 

அழற்சி எதிர்ப்பு: 

2014இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ப்ரோக்கோலியில் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் இருப்பது தெரிய வந்தது. இதில் உள்ள சல்போராபேனின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அழற்சி அறிகுறிகளை குறைக்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்துள்ளனர். ப்ரோக்கோலியின் சத்துக்கள் வீக்கத்தை எதிர்த்துப் போராடும். 

நீரிழிவு நோய்: 

ப்ரோக்கோலியை உண்பதால்  டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதில் உள்ள சல்போராபேன் தான் அதற்கு  காரணமாகும். சில ஆண்டுகளுக்கு முன் செய்த ஆய்வில் குறைந்த நார்ச்சத்து உண்பவர்களை விட அதிக நார்ச்சத்து உணவை சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் குறைவு தானாம். 

Broccoli For Health In Tamil

இதய ஆரோக்கியம்: 

ப்ரோக்கோலியில் காணப்படும் நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களைப் பாதிக்கும் கார்டியோ வாஸ்குலார் நோய்களிலிருந்து (CVD) பாதுகாக்கிறது. ப்ரோக்கோலி வயதான பெண்களுக்கு பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி நோய் ஏற்படுவதை குறைப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த நோய் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும். ப்ரோக்கோலியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம், சல்ஃபோராபேன் இந்நோய் ஆபத்தை குறைக்கிறது. 

சுமார் 76 கிராம் ப்ரோக்கோலியை ஒருவர் சாப்பிடும்போது, தினசரி பொட்டாசியம் தேவையில் கிட்டத்தட்ட 5% கொடுக்கிறது.  2017ம் ஆண்டின் ஒரு ஆய்வு அதிக நார்ச்சத்து உண்பவர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவாக இருப்பதாக சொல்கிறது. குறைந்த அளவு நார்ச்சத்து சாப்பிடுபவர்களை விட இவர்களுடைய இரத்த கொழுப்பு குறைவாக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது. 

இதையும் படிங்க:  க்ரிஸ்பி அண்ட் க்ரன்ச்சியாக இருக்கும் ப்ரக்கோலி மசால் வடை !நீங்க ட்ரை பண்ணிருக்கீங்களா?

Broccoli For Health In Tamil

எப்படி ப்ரோக்கோலியை சமைப்பது? 

ப்ரோக்கோலியை கழுவி விட்டு அதில் பூச்சிகள் இல்லையென்றால் பச்சையாக கூட உண்ணலாம். சாலட், ஆம்லெட்களில் இதன் சுவை அபாரமாக இருக்கும். ப்ரோக்கோலியை நன்கு கழுவி விட்டு, சுடுநீரில் வேக வைத்து அதை முட்டையுடன் சேர்த்து ஆம்லெட் ஆக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். 

ப்ரோக்கோலி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 

தொட்டு பார்த்தால் இறுக்கமாகவும், உறுதியாகவும் உள்ள அடர் பச்சை நிற ப்ரோக்கோலியை வாங்கலாம். மஞ்சள் நிறம் அல்லது வாடிப்போன ப்ரோக்கோலியை வாங்குவதை தவிர்க்கவும்.

ப்ரோக்கோலி வாங்கிவிட்டு சமைக்காமல் நீண்ட நாள் அறை வெப்பநிலையில் வைத்தால் அது நார்ச்சத்துள்ளதாகவோ மாறும். அப்படி நிலையில் சாப்பிடக் கூடாது. அது இறுக்கமாக பச்சை நிறத்தில் இருக்கும் போது வாங்கி சாப்பிட வேண்டும். 

ப்ரோக்கோலியை பிரிட்ஜில் உள்ள டிராயரில், துளையிடப்பட்ட பைகளில் கழுவாமல் வைக்க வேண்டும்.  ப்ரோக்கோலியை உண்பதற்கு முன்பே கழுவ வேண்டும். ஏனென்றால் ஈரமான ப்ரோக்கோலியில் பூஞ்சை உருவாகும். மேலும் தளர்வாக மாறும்.

ப்ரோக்கோலியில் வைட்டமின் கே அதிகமாக காணப்படுவதால் வார்ஃபரின் (கூமடின்) போன்ற  மருந்துகளை  பயன்படுத்துபவர்கள் திடீரென ப்ரோக்கோலி அதிகமாக உண்ண வேண்டாம். மருத்துவ பரிந்துரையை கேளுங்கள்.

click me!