இந்த நாட்டுக்கு விசா இல்லாமலே போகலாம்! 2 மாதம் வெளிநாட்டு டூருக்கு ரெடியா?

First Published | Sep 25, 2024, 3:57 PM IST

இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் இலங்கையில் 60 நாட்கள் விசா இல்லாமலே தங்க அனுமதி கிடைக்கும்.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் இலங்கையில் 60 நாட்கள் விசா இல்லாமலே தங்க அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி அக்டோபர் 1, 2024 முதல் இந்த விசா இல்லாத அனுமதி ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி ஐவிஎஸ்-ஜிபிஎஸ் (IVS-GBS) மற்றும் விஎஃப்எஸ் குளோபல் (VFS Global) நிறுவனங்கள் இ-விசா வழங்கும் சேவையை நிறுத்தி வைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

முன்னதாக, இலவச விசா நீட்டிப்பு மே 31, 2024 அன்று முடிவடைந்ததால், இந்தியர்கள் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இலங்கை வந்த பின்பு விசாவுக்கு விண்ணப்பித்துப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. இ-விசா சேவை நிறுத்தப்பட்டதால், இந்தியர்கள் இப்போது விசா-ஆன்-அரைவல் ஆப்ஷனை பயன்படுத்தலாம் தற்போது, ​​இந்தியர்களுக்கான விசா கட்டணம் சுமார் ரூ.4,200.

இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்ல முடியும். விசா இல்லாத நாடுகளின் முழு பட்டியலில் நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, யுஏஇ, நேபாளம், இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ​​ஈரான், சுவீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாட்டு மக்களுக்கும் விசா இல்லாத நுழைவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

விசா இல்லாத பயணம், முன்னதாகவே விசாவைப் பெறாமல் ஒரு நாட்டிற்குள் நுழைய உங்களை அனுமதிக்கிறது. இது சிக்கலான விசா செயல்முறைகளைத் தவிர்க்கும் விசா கட்டணங்களைச் சேமிக்கவும் உதவுகிறது. பொதுவாக, விசா இல்லாத நாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் மட்டுமே தேவை. இருப்பினும், சில நாடுகளுக்கு பயணத்திற்கான சான்று அல்லது விமான நிலைய வரி போன்றவை கூடுதலாகத் தேவைப்படலாம்.

2023ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த மொத்த வெளிநாட்டினரில் 20% பேர் இந்தியர்கள். புதிய விசா இல்லாத கொள்கை இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2023இல், இந்தியா மற்றும் ஆறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை இலங்கை தள்ளுபடி செய்தது. இந்தக் கொள்கை மே 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில் இதுவரை 246,922 இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றிருக்கிறது. இங்கிலாந்திலிருந்து 123,992 பேர் இலங்கை சென்றுள்ளனர். 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னர் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்க விசா இல்லாத பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாட்டு மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2024 இன் முதல் பாதியில் இலங்கை சுற்றுலா மூலம் 1.5 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய சுற்றுலா வருவாய் 875 மில்லியன் டாலர்களாக இருந்தது.

sri lanka offers visa free entry to indian citizens

இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவுக்கு அனுமதி வழங்கும் வேறு சில நாடுகள்: அங்கோலா (30 நாட்கள்), பார்படாஸ் (90 நாட்கள்), பூட்டான் (14 நாட்கள்), டொமினிகா (180 நாட்கள்), எல் சால்வடார் (90 நாட்கள்), பிஜி (120 நாட்கள்), காம்பியா (90 நாட்கள்), கிரெனடா (90 நாட்கள்), ஹைட்டி (90 நாட்கள்), ஈரான் (15 நாட்கள்), ஜமைக்கா (90 நாட்கள்), மலேசியா (30 நாட்கள்), மொரிஷியஸ் (90 நாட்கள்), நேபாளம் (90 நாட்கள்), ருவாண்டா (30 நாட்கள்), தாய்லாந்து (30 நாட்கள்)

விசா இல்லாத நாடுகளுக்குச் செல்வதற்கான தேவைகள்: விசா இல்லாத நாடுகளுக்குச் செல்வதற்கு வேறு சில அடிப்படையான ஆவணங்கள் தேவைப்படும். செல்லுபடியாகும் பாஸ்போர்ட், தங்கும் காலம், திரும்பியச் செல்வதற்கான டிக்கெட், பயணச் செலவுகளுக்கான பணம், தங்குமிடத்திற்கான சான்று, பயணம்/மருத்துவக் காப்பீடு, குற்றப் பதிவு சோதனை, சுங்க சோதனை ஆகியவை தேவையாக இருக்கும்.

Latest Videos

click me!