குழந்தை வளர்ப்பு என்பது அனைத்து தாய்மார்களுக்கும் சவாலான அதே நேரத்தில் சுவாரஸ்யமான பயணமாகும், ஆனால் அது எளிதானது அல்ல, மேலும் தாய்மார்கள் தங்கள் பொறுப்புகளை சமநிலைப்படுத்தவும், தங்கள் குழந்தைகளை அக்கறையுடன் வளர்க்கவும் முயற்சிப்பதால் சில நேரங்களில் தங்கள் குழந்தை வளர்ப்பில் தவறு செய்கிறார்கள். பல தாய்மார்கள் தற்செயலாக செய்யும் 8 பொதுவான தவறுகள் குறித்து, அதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
அதிகப்படியான பாதுகாப்பு
பல அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக பாதுகாக்க முயற்சி செய்வார்கள், தங்கள் குழந்தைகளுக்கு எந்த தீங்கும் நடக்கக்கூடாது, எந்த கஷ்டங்களையும் அனுபவிக்க கூடாது என்று கருதி அவர்களை அதிகமாக பாதுகாக்க முயற்சி செய்வார்கள். ஒரு தாயாக தனது குழந்தைக்கு பாதுகாப்பை வழங்குவது இயற்கையானது என்றாலும், அதிகப்படியான பாதுகாப்பை வழங்குவது குழந்தையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் நெகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் நுட்பங்களில் வளர்ச்சியைத் தடுக்கலாம்.