ஆட்டுப் பால் குடிப்பதால் அவ்ளோ நன்மைகள் இருக்கு.. அதுவும் பசும் பாலை விட சிறந்ததாம் தெரியுமா?

First Published | Sep 25, 2024, 2:10 PM IST

Goat Milk vs Cow Milk : ஆட்டுப் பால் பசும்பாலை விட அதிக சத்துக்களை கொண்டுள்ளது. ஏன் ஆட்டுப் பால் குடிக்க வேண்டும் என்பதற்கான சில பதில்களை இங்கு காணலாம். 

Goat Milk vs Cow Milk In Tamil

ஆட்டுப்பால் பசும் பால் அளவுக்கு விற்பனைக்கு வரவில்லை என்பதால், அதை குறித்து பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. அந்த காலத்தில் மகாத்மா காந்தி கூட ஆட்டுப்பால் தான் அருந்துவாராம். அதில் அவ்வளவு நன்மைகள் உள்ளன. அது சரி நீங்கள் எப்போதாவது குடித்துள்ளீர்களா? பலர் ஒரு தடவை கூட குடித்திருக்கமாட்டார்கள்.  உண்மையில் ஆட்டுப் பாலின் சுவை சுமாராக தான் இருக்கும். ஆனால் நன்மைகளோ ஏராளம்.  ஆட்டுப்பாலில் பசும்பாலை விட பல சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. வயிற்று வலி நிவாரணமாகக் கூட ஆட்டுப்பாலை சொல்வார்கள். 

உண்மையில் பசும் பாலை காட்டிலும் ஆட்டுப் பால் தான் உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். நாள்தோறும் ஆட்டுப்பால் குடிப்பவர்கள் உடலின் வலிமை அசாத்தியமானதாக இருக்கும். ஏனென்றால் அதில் அவ்வளவு சத்துக்கள் காணப்படுகின்றன. ஆட்டுப் பால் பசும்பாலை விட ஏன் சிறந்தது என்பதற்கான விளக்கத்தை இந்தப் பதிவில் காணலாம். 

Goat Milk vs Cow Milk In Tamil

ஆட்டுப்பாலின் ஊட்டச்சத்துக்கள்:  

 எலும்புகளுக்கு தேவையான கால்சியம் ஆட்டுப்பாலில் பசும்பாலை விட அதிகமாக உள்ளது.  ஆட்டுப் பாலில் உள்ள புரதங்கள் (A2 கேசீன்) அளவில் சிறியதாக இருப்பதால், எளிதில் ஜீரணமாகும். பசும் பாலில் செரிக்க அதிக நேரம் எடுக்கும். ஆட்டுப்பாலில் லாக்டோஸ் குறைவாக உள்ளது. சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருக்காது. அவர்கள் ஆட்டுப்பால் குடிக்கலாம். ஆட்டு பாலில் வைட்டமின்கள் ஏ, சி, பி12 மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன. 

ஆட்டுப்பாலின் நன்மைகள்: 

ஆட்டுப்பாலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆட்டுப்பால் குடிப்பதால் குடலின் ஆரோக்கியம் மேம்படும். ஏனென்றால் குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாவை ஆட்டுப்பால் ஊக்குவிக்கிறது. பசும்பாலை ஒப்பிடும்போது ஆட்டுப் பால் ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவாக உள்ளது.  ஆட்டிசம், தோல் அரிப்பு, ஆஸ்துமா மாதிரியான உடல்நலக் கோளாறுகளுக்கு ஆட்டுப்பால் நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. 

Latest Videos


Goat Milk vs Cow Milk In Tamil

ஆட்டுப் பால் vs மாட்டுப் பால்: 

ஆட்டுப் பாலில் கால்சியம் சத்து மாட்டுப்பாலைவிட அதிகம். ஆட்டு பாலில் கால்சியம் 327 மிகி, பசும் பாலில் 300 மிகி அளவிலும் உள்ளது.  புரதச்சத்தும் ஆட்டுப் பாலில் 8.7 கிராம், பசும் பாலில்  8.1 கிராம் அளவிலும் காணப்படுகிறது. கொழுப்பு 10.9 கிராம் ஆட்டு பாலில் உள்ளது. பசும் பாலில் 10.3 கிராம் தான் இருக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி ஆட்டுப்பாலில் 10%,20% முறையே உள்ளன. ஆனால் பசும் பாலில் வைட்டமின் சி இல்லை. வைட்டமின் ஏ மட்டும் 6% உள்ளது.

பசும்பால் அருந்தும் சிலருக்கு வாவு தொல்லை இருக்கும். வயிறு நிரம்பிய உணர்வு வரும். இதனால் அவர்கள் சாப்பிடமாட்டார்கள். ஆனால் ஆட்டுப்பாலில் இந்த பிரச்சனை இருக்காது.  பசும்பாலை விட ஆட்டுப்பால் விரைவில் செரிமானம் ஆகிவிடும்.

Goat Milk vs Cow Milk In Tamil

அது மட்டுமில்லை; வாயு மாதிரியான பிரச்சினைகள் இருக்காது. பசும்பாலுடன் ஒப்பிடும்போது ஆட்டுப் பாலில் இருக்கும் கொழுப்பு  மூலக்கூறுகள் சிறியவை. இதனால் விரைவில் செரித்து விடும் தசைகளுக்கு வலுவூட்டக்கூடிய பொட்டாசியம் தாதுவும் ஆட்டுப் பாலில் காணப்படுகிறது. 

பசும்பாலில் உள்ள கொழுப்பை குறைக்க அதை பால் நிறுவனங்கள் மெருகேற்றுவார்கள். ஆனால் ஆட்டுப் பால் அந்த மாதிரி தயார் செய்யப்படுவதில்லை. ஆகவே இதில் கொழுப்பு உடையாமல் அதே நேரம் சிறிய மூலக்கூறாகவே இருக்கும். பசும் பாலில் கேசின் என்ற புரதம் உள்ளது. இதனால் சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற கோளாறுகள் வரும். ஆட்டுப் பாலில் கேசின் புரதம் அளவில் குறைவாக உள்ளதால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு குறைவு. 

இதையும் படிங்க:  வெள்ளாட்டுப் பாலில் அப்படி என்ன சிறப்புகள் அடங்கியிருக்கு? இதை வாசிங்க தெரியும்...

Goat Milk vs Cow Milk In Tamil

குறைந்த லாக்டோஸ்: 

மனித உடலில் உற்பத்தி செய்யப்படும் லாக்டேஸ் என்ற என்சைம் தான் பசும்பாலை விரைவில் செரிமானம் அடைய செய்யும். பசும் பாலிலும் லாக்டேஸ் என்ற சர்க்கரை உள்ளது. சிலருக்கு லாக்டேஸ் என்சைம் அதிகமாக இருக்காது. அவர்களுக்கு பசும் பால் எடுத்து கொள்வதில் சிக்கல் வரலாம். அவர்கள் ஆட்டுப் பால் அருந்தலாம். 

நோயெதிர்ப்பு சக்தி: 

ஆட்டுப்பாலில் வைட்டமின் ஏ, சி, பி 12 போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட பெரிதும் உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்லாது கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் ஆட்டுப்பாலில் அதிகம் உள்ளன. இவை உடலை வலுவாக்க உதவுகிறது. 

ஆட்டுப் பாலில் இவ்வளவு சத்துக்கள் இருந்தாலும் அதன் சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்காது. பசும்பாலை விரும்பி குடிப்பவர்கள் ஆட்டுப்பாலின் சுவையை ரசித்து அருந்தமாட்டார்கள். இவர்கள் ஆட்டுப்பாலின் சத்துக்களை பெற அதில் தயார் செய்த வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 

Goat Milk vs Cow Milk In Tamil

கவனத்தில் கொள்க! 

ஆட்டுப்பாலின் தரம் பண்ணை, ஆட்டின் இனம், வளர்ப்பு முறைகளைப் பொறுத்து தரம் மாறுபடும். குழந்தைகள், ஏற்கனவே உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள் பசும் பாலை முற்றிலும் கைவிட்டு ஆட்டுப்பாலுக்கு மாறினால் அதற்கு முன் மருத்துவரிடம் கேட்டு கொள்ளுங்கள். ஆட்டுப் பால் நல்லது தான் என்றாலும் அனைவருக்கும் ஏற்றதல்ல. ஏற்கனவே உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் கவனமாக இருங்கள்.

இதையும் படிங்க:  ஆட்டுப்பால் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல... சருமத்திற்கு ஸ்பெஷல் தான். எப்படி தெரியுமா?

click me!