
ஒவ்வொரு குழந்தையும் வளரும்போது அதற்கேற்றவாறு ஊர்ந்து செல்வது, நடப்பது, பேசுவது போன்ற விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.
பொதுவாகவே குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு பிறர் பேசுவது கவனிக்க தொடங்குவார்கள். ஆக தனது அம்மாவின் வாய அசைவை பார்க்கும். குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது அவர்கள் வாயில் இருந்து எச்சில் வடியும். இதனால் குழந்தைகள் சீக்கிரமாகவே பேச தொடங்குவார்கள் என்று பலர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
சில குழந்தைகள் ஒரு வயதான பிறகு பேசுவது இயல்பு. ஆனால் சில குழந்தைகளோ இரண்டு வயசு ஆனால் கூட பேசுவதில்லை. இதனால் பெற்றோர்கள் மிகவும் வேதனைப்படுவார்கள் மற்றும் என்ன செய்வது என்று தவிப்பார்கள். தனது குழந்தை பேச ஆரம்பித்த உடன் அம்மா, அப்பா என்று கூப்பிட வேண்டும் என ஒவ்வொரு பெற்றோர்களின் கனவு. அவர்கள் அதற்காகவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
கண்டிப்பாக குழந்தைகள் இரண்டு வயது ஆன பிறகு பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், சில குழந்தைகளுக்கு இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். இந்த நாள் பெற்றோர்கள் தான் தவிப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் வயதிற்கு ஏற்ப சரியான நேரத்தில் பேச வேண்டுமானால் அவர்களை எந்த மாதிரி ஊக்கப்படுத்து வேண்டும் என்று பெற்றோர்களுக்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
குழந்தைகள் சீக்கிரமாக பேச சில பெற்றோர்களுக்கு டிப்ஸ் :
உங்கள் குழந்தை சீக்கிரமாக பேச வேண்டுமெனில், குழந்தைகளிடம் எப்போதுமே பேசிக் கொண்டே இருங்கள். நீங்கள் பார்த்திருக்கலாம், குழந்தை பிறந்ததிலிருந்து தாய் எப்போதும் குழந்தை முன் எதையாவது பேசிக்கொண்டு இருப்பார்கள். காரணம் குழந்தைக்கு சீக்கிரமே எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. எனவே குழந்தைகளிடம் எதையாவது பேசிக்கொண்டே இருந்தால் அவர்கள் சீக்கிரமே பேச ஆரம்பித்து விடுவார்கள்.
பெரும்பாலான அம்மாக்கள் தங்கள் குழந்தைக்கு பொம்மைகளை வாங்கி கொடுத்து விளையாட வைப்பார்கள். குறிப்பாக குழந்தைகள் விளையாடும் ஒவ்வொரு பொருளின் பெயரையும் பற்றி சொல்லி கொடுப்பார்கள். இதனால் அவர்கள் அம்மா சொல்வதை கூர்மையாக கவனித்து அதன்படி அவர்களும் பேசும் முயற்சி செய்வார்கள். இது தவிர, குழந்தையின் கேட்கும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.
நீங்கள் கவனத்தில் இருப்பீர்கள் குழந்தைகளை கதை சொல்லி அம்மாக்கள் உறங்க வைப்பார்கள். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? இப்படி செய்வதினால் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் அதிகரிப்பது மட்டுமின்றி, அவர்கள் தினமும் வெவ்வேறு வார்த்தைகளை கேட்பதால் அவற்றில் சிலவற்றை அவர்களது மனதில் பதிந்து, அதன் மூலம் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பிப்பார்கள்.
இதையும் படிங்க: மழைக்காலத்தில் சின்ன பசங்க காய்ச்சலில் இருந்து தப்ப இதை மறக்காமல் செய்ங்க!
பொதுவாகவே குழந்தைகளுக்கு வார்த்தைகளை சரியாக உச்சரிக்க தெரியாது. அவர்கள் எப்போதாவது மட்டுமே சரியாக உச்சரிப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் சரியாக உச்சரிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அதுவும் குறிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொடுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் குழந்தை படிப்படியாக தெளிவாக பேச ஆரம்பித்து விடும்.
ஒவ்வொரு அம்மாக்களும் தங்கள் குழந்தை இடம் இது உன் தாத்தா இதுவும் பாட்டி என்று உறவினர்களை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் அந்த வார்த்தைகள் அவர்களது மனதில் வேரூன்றி இருக்கும். இது அவர்களை மெதுவாக பேச முயற்சி செய்ய வைக்கும்.
உங்கள் குழந்தைக்கு ஏதாவது பிடித்திருந்த பொம்மைகள் அல்லது தின்பண்டங்களை அவர்கள் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து விடுங்கள். அது வேண்டும் என்று அவர்கள் கேட்க முயற்சி செய்வார்கள். இப்படி செய்வது மூலம் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.
இது எல்லாவற்றையும் விட, முக்கியமாக குழந்தைகளை எப்போதுமே வீட்டிலேயே அடைத்து வைக்காதீர்கள். அவர்களை வெளியிலே அழைத்துச் செல்லுங்கள். மரம், வானம், நட்சத்திரம், ஆறு, மாடு, கார், பஸ் என்று ஒவ்வொரு விஷயங்களையும் அவர்களுக்கு காட்டி ரசிக்க கற்றுக் கொடுங்கள். இதனால் குழந்தைகளும் வெளியிலே வர விரும்புவார்கள். மேலும் அவர்கள் தங்களது ஆசைகளை சொல்லவும் முயற்சி செய்வார்கள். இதற்காக நீங்கள் பூங்கா அல்லது உங்களது நண்பர்கள் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கிருக்கும் குழந்தைகளிடம் உங்கள் குழந்தை பழகும் போது தானாகவே பேச ஆரம்பித்து விடும்.
இதையும் படிங்க: துரித உணவில் கலக்கும் அந்த 'ஒரு' பொருள்.. இரவில் கொடுத்தால் குழந்தைகளுக்கு பேராபத்து!!