பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி, வேர்க்கடலை போன்ற பலவகைகளில் நட்ஸ்கள் உள்ளன. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும். இது தவிர, இவை நம் உடலுக்கு தேவையான ஆற்றலையும், போதிய புரதச்சத்தையும் கொடுக்கும்.
உங்களுக்கு தெரியுமா.. மற்ற எல்லா நட்ஸ்களை விடவும் வால்நட் சுவையிலும், ஆரோக்கியத்திலும் சற்று வேறுபட்டது. முக்கியமாக, இது உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவும், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் முதல் இடத்தில் உள்ளது. அதுவும் குறிப்பாக, இதை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மைகள் கிடைக்குமாம்.
வால்நட் ஊட்டச்சத்துக்கள் :
வால்நட்டில் கொழுப்பு, பொட்டாசியம், புரதச்சத்து, கால்சியம், சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தவிர, இதில் ஒமேகா-3 ஃபேட்டிக் ஆசிட் அமிலம் அதிகளவு நிறைந்துள்ளது. அதுபோலவே ஆன்டி ஆக்சிடன்ட்களும் அதிக அளவில் காணப்படுகின்றது.