மழை காலத்தில் ஏசியை இப்படி பயன்படுத்துங்க... கரெண்டு பில் மிச்சமாகும்!!
AC Maintaining Tips : மழை காலத்தில் ஏசியை பயன்படுத்தும்போது எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஏசியை பயன்படுத்தும் போது அதன் இயக்கத்தில் கவனம் கொள்வது அவசியம். அதிலும் மழைநேரம் அதிக கவனம் தேவை. மழை நேரத்தில் ஏற்கனவே காற்றில் ஈரப்பதம் இருக்கும் இது மாதிரியான சமயங்களில் உலர் பயன்முறையில் (dry mode) வைக்க வேண்டும்.
மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்த சில டிப்ஸ்: மழை நேரத்தில் ஏசியை ஆன் செய்தால் உலர் பயன்முறையை (dry mode) வைத்து பயன்படுத்துங்கள். இந்த அமைப்பு தான் காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி அறையை இதமாக வைக்கிறது. இது தவிர கூல், ஹீட், ஃபேன் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும் தேர்வு செய்யலாம். இதனால் கரெண்டும் குறைவாக செலவாகும்.
வெப்பநிலையில் கவனம்: மழை நேரத்தில் இதமான அறை வெப்பநிலையை உணர வெப்பநிலையை சரி செய்ய வேண்டும். அறையின் தட்பவெப்பநிலையை சரியாக பராமரிக்க 24-26°C அல்லது 25-30°F என்றவாறு வைத்து கொள்ளுங்கள். இதை விட கொஞ்சம் அதிகமாக வைத்தால் ஏசியின் செயல்பாடு நன்றாக இருக்கும். மின்சாரமும் அதிகம் செலவாகாது.
இதையும் படிங்க: Asthma Patients in AC : ஆஸ்துமா நோயாளிகளே! இந்த விஷயம் தெரியாம ஏசியில இருக்காதீங்க.! இல்லையெனில் ஆபத்து..
புயல் வந்தால்.. மழை நேரத்தில் ஏசியை பயன்படுத்தலாம் தான். ஆனால் புயலுடன் கூடிய மழை வரும்போது ஏசியை அணைத்து விடுங்கள். அதுவே நல்லது. மழை நேரத்தில் ஏசி விரைவில் சூடாகும். இடி, மின்னல் உங்கள் வீட்டை தாக்கும்பட்சத்தில் அது மின்கம்பிகள் வழியே போய் ஏசியை பாதிக்கும். இதனால் மோசமான விளைவுகள் வரலாம்.
இதையும் படிங்க: AC ஏன் வெடிக்கிறது தெரியுமா..? இந்த விஷயங்களை செய்ங்க வெடிக்காது!
சுத்தம் கட்டாயம் : மழை நேரங்களில் ஏசி சுருள்களை சுத்தம் செய்வது அதனுடைய பராமரிப்புக்கு உதவும். எந்த பருவகாலமாக இருந்தாலும் ஏசியை சுத்தம் செய்வது முக்கியம். அப்போது தான் மற்ற பிரச்சனைகள் தலைதூக்காது. நீண்ட காலம் ஏசி எந்த பிரச்சனையுமின்றி நன்றாக இருக்கும். குறிப்பாக மழையோ, வெயிலோ ஏசியை ஆன் செய்வதற்கு முன், எல்லா கதவுகளையும் ஜன்னல்களையும் மூட வேண்டும்.