பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை ஆகியவற்றை காம்பை நீக்கி காட்டன் பையில் வைத்து பாருங்கள் அவை நீண்ட நாள் பிரஷ் ஆகவே இருக்கும். மணமும் மாறாமல் அப்படியே இருக்கும்.
இஞ்சியில் மண் இருந்தால் அதை தண்ணீரில் நன்கு கழுவி அப்படியே திறந்தபடி வையுங்கள். மூடி வைத்தால் அதில் பூஞ்சைகள் உருவாகும்.
தேங்காயை நீங்கள் ஃப்ரிட்ஜில் அப்படியே வைத்தால் அழுகிவிடும். எனவே, தேங்காயை துருவி அதை ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள். இதனால் சமைக்கும் போது அவசரத்திற்கு கூட பயன்படுத்தலாம்.
சீஸ், பட்டர் போன்ற பால் பொருட்களை அப்படியே பிரிட்ஜில் வைக்காமல், அதை அலுமினிய பேப்பரில் சுருட்டி, அதை ஒரு டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்துங்கள்.
இட்லி தோசை மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மூடாமல் வைக்காதீர்கள். அதற்கென உரிய டப்பாவில் போட்டு நன்கு மூடி வைக்கவும். ஃப்ரிட்ஜில் மீதமான உணவை வைக்கும் போது மூடி வைத்து பழகுங்கள். முக்கியமாக அதை மறுநாளே பயன்படுத்துங்கள்.