நான்ஸ்டிக் தவாவை 'இப்படி' பயன்படுத்தினால் நீண்ட நாள் உழைக்கும்! செம்ம டிப்ஸ்

Published : Mar 01, 2025, 12:16 PM IST

Non Stick Pan Care : தோசை சுடுவதற்கு பயன்படுத்தப்படும் நான்ஸ்டிக் தவா நீண்ட காலம் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

PREV
17
நான்ஸ்டிக் தவாவை 'இப்படி' பயன்படுத்தினால் நீண்ட நாள் உழைக்கும்! செம்ம டிப்ஸ்
நான்ஸ்டிக் தவாவை 'இப்படி' பயன்படுத்தினால் நீண்ட நாள் உழைக்கும்! செம்ம டிப்ஸ்

நாம் உடுத்தும் ஆடை முதல் பயன்படுத்தும் பொருட்கள் வரை என எதுவாக இருந்தாலும் சரி அவைகள் நீண்ட நாள் இருந்தால் நமக்கு லாபம் தான். அதுவே அவற்றின் ஆயுட்காலம் சீக்கிரமாகவே முடியும் போது நமக்கு தான் தேவையில்லாத செலவுகள் வரும். மேலும் அவற்றை சரியாக பராமரிக்காவிட்டாலும் சீக்கிரமாகவே பழுதடைந்துவிடும்.

27
நான்ஸ்டிக் தவா நீண்ட நாள் பயன்படுத்த

அந்த வகையில், தற்போது பெரும்பாலானோர் சில்வர், அலுமினிய பாத்திரத்திற்கு பதிலா இருக்க நான்ஸ்டிக் பாத்திரங்களை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். விதவிதமான மக்களின் கண்களை கவரும் வகையில் பல வகையான நான்ஸ்டிக் பாத்திரங்கள் கடைகளில் விற்பனையாகின்றன. அவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு கேடு என்று தெரிந்தும் கூட வாங்கி பயன்படுத்துகிறார்கள். அந்த இரவில் தோசை சுடுவதற்கு நான்ஸ்டிக் தவாவை தான் பயன்படுத்துகிறார்கள். அது நீண்ட காலம் உழைக்கும் என்று நினைத்துதான் வாங்கி இருப்பார்கள். ஆனால், திடீரென சில மாதங்களிலேயே அதில் தோசையில் சுட்டா கூட சரியாக வராது, ஒட்டிக்கொள்ளும். பலவிதமான முயற்சிகளையும் செய்து பார்த்து இருந்தாலும் எந்தவித பயனும் இல்லை. நான் ஸ்டிக் தவாவில் தோசை சுடுவதற்கு முக்கிய காரணம் அதிக எண்ணெய் தேவையில்லை குறைந்த அளவு மட்டுமே போதும். இத்த சூழ்நிலையில்ழ் நான்ஸ்டிக் தவா நீண்ட நாள் உழைக்க சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மற்றும் பின்பற்றினால் போதும்.

37
எண்ணெய் பரப்பவும்

பொதுவாக நான் ஸ்டிக்கில் தோசை சுடுவதற்கு முன் எண்ணெய் பயன்படுத்துவோம். ஆனால் இதனால் உடம்பில் தேவையற்ற கலோரிகள் தான் சேரும். நான்ஸ்டிக் தவாவும் சீக்கிரமாகவே பழுதடைந்து விடும். எனவே எண்ணெய்க்கு பதிலாக எண்ணெயில் நினைத்த ஒரு காகித துண்டை நான்ஸ்டிக் சுற்றி நன்றாக துடைக்கவும். இப்படி செய்தால் நான் ஸ்டிக் நீண்ட காலம் நீடிக்கும்.

47
மெட்டல் கரண்டியை பயன்படுத்தாதே!

நான்ஸ்டிக் தவா நீண்ட காலம் உழைக்க மெட்டல் கரண்டியை பயன்படுத்த வேண்டாம். அதன் கூர்மையான விளிம்புகள் நான்ஸ்டிக் தவாவின் மேற்பூச்சிகளை உரித்து விடும். அதற்கு பதிலாக நீங்கள் மரக்கட்டை, பிளாஸ்டிக் அல்லது சிலிக்கான் கரண்டியை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:  இந்த பாத்திரங்களில் சமைக்காதீங்க.. கேன்சர் ஆபத்து அதிகம்.. எச்சரிக்கும் மருத்துவர்..

57
சுத்தம் செய்யும் முறை

நான்ஸ்டிக்கை சுத்தம் செய்ய சூடான நீர், டிஷ் வாஷ் சோப் மற்றும் மென்மையான ஸ்பான்ஞ் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். நான்ஸ்டிகில் உணவுகள் கருகி இருந்தால் அல்லது ஒட்டிக் கொண்டிருந்தால் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். சுத்தம் செய்த பிறகு ஒரு காகித துண்டையில் எண்ணெயில் நனைத்து நான்ஸ்டிக்கின் மேற்பரப்பை நன்கு துடைக்கவும்.

இதையும் படிங்க:  வீட்டில் இருக்கும் நான் ஸ்டிக் பேனில் கீறல் விழுந்து விட்டதா? நொடியில் சரி செய்து தோசை சுட சூப்பர் டிப்ஸ்..

67
குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்

நான்ஸ்டிக் தவாவை அதிக சூடு இல்லாமல் மிதமான அல்லது குறைந்த வெப்பத்தில் வைத்து தான் சமைக்க வேண்டும். அதிக தீயில் வைத்து சமைத்தால் அதன் மேற்பூச்சு சேதமடையும். 

77
அமில உணவுகளை சமைக்காதே!

எலுமிச்சை, தக்காளி போன்ற அமிலம் கொண்ட உணவுகளை நான்ஸ்டிக் தவாவில் சமைத்தால் அதன் மேற்பூச்சு சேதமடையும். அதுபோல சமைத்த உணவை அப்படியே தவாவில் வைக்காமல், அதை வேறு பாத்திரத்திற்கு சமைத்த உடனே மாற்றி விடுங்கள். இல்லையெனில், தாவாவின் வாசனை மாறும்.

Read more Photos on
click me!

Recommended Stories